இந்தியா - சீனா, இந்தியா - பாகிஸ்தான் மோதல் முற்றுகிறதா? அமெரிக்க உளவுத்துறை பகீர் அறிக்கை!!

By Dhanalakshmi G  |  First Published Mar 9, 2023, 1:05 PM IST

இந்தியா பாகிஸ்தான் மற்றும் இந்தியா சீனா இடையே மோதல் முற்றுவதற்கான சாத்தியக் கூறுகளை கண்டறிந்து இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை புதன்கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 


பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், முன்பு போல் இல்லாமல் பாகிஸ்தானின் சீண்டல்களுக்கு உடனடியாக ராணுவத்தின் மூலம் பதில் அளிக்கும் பலத்துடன் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கை ஆண்டுக்கு ஒருமுறை அமெரிக்க புலனாய்வுத்துறையால் தயாரிக்கப்படுவதாகும். 

அந்த அறிக்கையில், ''இந்தியாவும் சீனாவும் இருதரப்பு எல்லைப் பேச்சுக்களை அவ்வப்போது கூடி தீர்த்துக் கொண்டாலும், கடந்த 2020 ஆம் ஆண்டில் இருநாடுகளுக்கும் இடையே நடந்த மோதல்களினால் உறவுகள் கடினமானதாகவே பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் இருநாடுகளுக்கும் இடையே நடந்த இந்த மோதல் இருதரப்பிலும் கசப்பான உணர்வுகளை அளித்துள்ளது.

Latest Videos

undefined

சர்ச்சைக்குரிய எல்லையில் இந்தியா மற்றும் சீனா தங்களது ராணுவத்தை விரிவுபடுத்தி உள்ளது. இது இரண்டு மிகப்பெரிய அணுசக்தி சக்திகளுக்கு இடையே மீண்டும் மோதலை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தி இருக்கிறது. இது அமெரிக்காவுக்கு நேரடியான அச்சுறுத்தலை மட்டுமின்றி, தலையீட்டையும் வலியுறுத்துவதாக இருக்கிறது. முன்பு மோதலை ஏற்படுத்தி இருந்த எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் மீண்டும் மோதலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

62 வயது மூதாட்டிக்கு 25 வயது கணவர்! 8வது குழந்தைக்கு காத்திருக்கும் டிக்டாக் ஜோடி!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நெருக்கடிகள் கவலை அளிப்பதாக இருக்கிறது. ஏனெனில் இரண்டு நாடுகளும் அணு ஆயுதம் பலம் படைத்தவை. 2021 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருநாடுகளுக்கும் இடையே எல்லையில் அமைதியை பேணுவது, போர் நிறுத்த ஒப்பந்தத்தை புதுப்பித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. இதைக் காப்பாற்ற வேண்டும் என்று இரண்டு நாடுகளும் முயற்சிக்கின்றன. 

"இருப்பினும், இந்தியாவுக்கு எதிரான அமைப்புகளுடன் இணைந்து மிரட்டல் விடுவது என்பது பாகிஸ்தானுக்கு புதிது இல்லை. முன்பும் இதை செய்துள்ளது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பதற்கு இந்தியா ராணுவ பலத்துடன் உள்ளது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Jesus of Tongeren: கென்யாவில் 'நான் தான் இயேசு' என்று அறிவித்த நபர்... சிலுவையில் ஏற்றத் தயாரான மக்கள்!

இந்த அறிக்கையின் மீது ஒரு கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், ''பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளவும், பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவதற்கான எங்கள் விருப்பத்தை தெரிவித்து இருக்கிறோம். இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம். தெற்கு ஆசிய மற்றும் மத்திய ஆசிய பிராந்திய பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போரிட தயாராக இருக்கிறோம். இது முற்றிலும், பாகிஸ்தானுடனான நமது உறவின் நெருக்கத்தைப் பொறுத்தது. 

"இந்த சவால்களை எதிர்கொள்ள அமெரிக்கா எங்களுடனான உறவை விரிவுபத்த முயல்கிறது. பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மையை அச்சுறுத்தும் எந்தவொரு குழுவும் நிச்சயமாக எங்களுக்கு கவலையாக உள்ளது'' என்று பிரைஸ் கூறினார்.

click me!