மீண்டும் போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; போர்க்களமான கொழும்பு பல்கலைக்கழகம்; போலீசார் மன்னிப்பு!!

By Dhanalakshmi G  |  First Published Mar 8, 2023, 12:47 PM IST

''கடந்த ஆண்டு அரகலயாவில் எப்படி நம்மை நிரூபித்தோமோ அதேபோல் இந்தாண்டும் செய்வோம்'' என்று மீண்டும் இலங்கையில் போராட்டத்துக்கான அழைப்பை ஐயுசிஎப் (இன்டர் யுனிவர்சிட்டி மாணவர்கள் கூட்டமைப்பு) ஒருங்கிணைப்பாளர் வசந்தா முதலிகே விடுத்துள்ளார்.


இலங்கையில் இன்னும் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் போராடலாம் என்ற நிலையில் பலரும் அழைப்பு விடுத்து வருகின்றனர். 

நாட்டின் பொருளாதார சீரழிவுக்கு நாட்டை ஆட்சி செய்த ராஜபக்சே குடும்பத்தினர்தான் காரணம் என்ற கோபத்தில் மக்கள் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவை வீட்டுக்கு அனுப்பினர். இதையடுத்து நாட்டின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே, பிரதமராக தினேஷ் குணவர்த்தன தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

Latest Videos

undefined

இந்த நிலையில், மீண்டும் இலங்கையில் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஐயுசிஎப் ஒருங்கிணைப்பாளர் வசந்தா முதலிகே விடுத்து இருக்கும் அழைப்பில், ''கடந்த ஆண்டு அரகலயாவில் எப்படி நம்மை நிரூபித்தோமோ அதேபோல் இந்தாண்டும் செய்வோம். நாங்கள் விரும்பியபடி செய்வோம். தடைகளை உடைப்போம், அரண்மனைகளை கையகப்படுத்துவோம். ஏனென்றால் இந்த நாட்டு மக்களுக்கு நீதியை வீதியில் மட்டுமே காண முடியும்'' என்று தெரிவித்துள்ளார். இவரது பேச்சுக்கு இளைஞர்கள் மத்திய வரவேற்பு கிடைத்துள்ளது.

500 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பலில் கெடாமல் இருந்த குங்குமப்பூ! ஸ்வீடன் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு

இந்த அமைப்பினர் நேற்றும் கொழும்பு பல்கலைக் கழகம் முன்பு கறுப்புக் கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டது. போலீசார் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசினர். பல்கலைக் கழகத்திற்குள் செல்ல விடாமல் போலீசாரை மாணவர்கள் தடுத்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் ஐயுசிஎப் ஒருங்கிணைப்பாளர் வசந்தா முதலிகே ஓயமாட்டோம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபடாதவர்களிடம் இன்று போலீசார் மன்னிப்பு கோரியுள்ளனர். நேற்று நடந்த இந்த சமபவத்தில் ஈடுபடுத்திக் கொள்ளாதவர்கள் எங்களை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். மாணவர்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் அமைப்பின் சார்பில் சலியா பெய்ரிஸ் கேட்டுக் கொண்டுள்ளார். 

United Kailasa: சாமியார் நித்யானந்தாவின் கைலாசா நாட்டுக்கு அங்கீகாரமா? ஐ.நா. விளக்கம்

click me!