Solar Eclipse 2023 in India: ஆண்டின் முதல் கிரகணமே ஹைபிரிட் சூரிய கிரகணம்! என்று, எப்படி பார்க்கலாம்?

By SG Balan  |  First Published Mar 7, 2023, 7:39 PM IST

2023ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வரும் ஏப்ரல் மாதம் நிகழ உள்ளது. அக்டோபர் 14ஆம் தேதி இன்னொரு சூரிய கிரகணமும் நிகழவுள்ளது.


இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20 ஆம் தேதி நிகழ்கிறது. இந்த சூரிய கிரகணத்தை காலை 7:04 மணி முதல் மதியம் 12:29 மணி வரை காணலாம். இது ‘நிங்கலூ சூரிய கிரகணம்’ அல்லது ‘ஹைபிரிட் சூரிய கிரகணம்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் நேரடியாகப் பார்க்க முடியாது. இருப்பினும் மற்ற நாடுகளில் இருந்து நேரடி ஒளிபரப்பு மூலம் இதைப் பார்க்கலாம். இதைத் தொடர்ந்து, அக்டோபர் 14ஆம் தேதி இன்னொரு சூரிய கிரகணம் நிகழவுள்ளது.

Latest Videos

undefined

ஹைபிரிட் சூரிய கிரகணம் என்றால் என்ன?

ஹைபிரிட் சூரிய கிரகணம் ஒரு வளைய கிரகணம் மற்றும் முழு சூரிய கிரகணம் ஆகியவை ஒன்றிணையும் நிகழ்வு ஆகும். சந்திரனின் நிழல் பூமி மீது முழுவதும் விழுந்து நகர்ந்து, மற்றொன்றுக்கு மாறுகிறது. இந்த அரிய கிரகணத்தின்போது, சூரியன் சில நொடிகளுக்கு ஒரு வளையம் போன்ற வடிவத்தில் காட்சி அளிக்கும். அது 'நெருப்பு வளையம்' என்று அழைக்கப்படுகிறது.

Female Entrepreneurs in India: தனி வழியில் பயணித்து சாதித்த டாப் 10 இந்தியப் பெண் தொழிலதிபர்கள்!

சூரிய கிரகணம் - எங்கே, எப்போது, எப்படி?

ஆஸ்திரேலியா, கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா, பசிபிக் பெருங்கடல், அண்டார்டிகா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியங்களில் உள்ள நாடுகளில் இந்த கிரகணம் தெரியும். இருப்பினும் இந்தியாவில் இதனைக் காண முடியாது. பொதுவாக நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடலில் சில நொடிகள் தெரியும். இதற்கிடையில், முழு கிரகணம் எக்ஸ்மவுத், மேற்கு ஆஸ்திரேலியா, திமோர் லெஸ்டே மற்றும் மேற்கு பப்புவா ஆகிய பகுதிகளில் மட்டும் இந்த கிரகணத்தை முழுமையாகப் பார்க்க முடியும்.

சூரிய கிரகணத்தை பாதுகாப்பாக பார்ப்பது எப்படி?

சூரிய கிரகணத்தின்போது சூரியனை நேரடியாகப் பார்ப்பது ஆபத்தானது என்று நாசா கூறுகிறது. எனவே சூரிய ஒளியைப் பார்ப்பதற்கு சிறப்பு கண் பாதுகாப்பு அவசியம் என்று பரிந்துரைக்கிறது.

கருப்பு பாலிமர் கண்ணாடி, அலுமினிய மைலார் கண்ணாடி, 14ஆம் எண் வெல்டிங் கண்ணாடி உள்ளிட்ட கண்ணாடிகளை கிரகணத்தைப் பார்க்க பயன்படுத்தப்படலாம். இவை சூரிய ஒளியை வடிகட்டும் ஃபில்டர் கண்ணாடிகள். பாதுகாக்கப்பட்ட சோலார் ஃபில்டர் பொருத்தப்படாத, கேமரா லென்ஸ், பைனாகுலர் அல்லது தொலைநோக்கி போன்றவற்றின் மூலம் கிரகணத்தைப் பார்ப்பதும் கடுமையான கண் பாதிப்பை ஏற்படுத்தும்.

Waste to Wealth: எல்லோரும் இவங்கள மாதிரி செய்யலாம்! தந்தை - மகனைப் பாராட்டிய பிரதமர் மோடி!

click me!