அமெரிக்காவுக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை அந்த நாட்டு நிறுவனங்கள் குறைத்துள்ளன.
இலங்கையில் முக்கியமாக மாவு வகைகளை விற்கும் பிராண்ட் நிறுவனமான செராண்டிப் அண்டு பிரைமா ஃபிளார் நிறுவனம் ஒரு கிலோ கோதுமை மாவுக்கு ரூ. 15-ஐ இன்று முதல் குறைப்பதாக அறிவித்துள்ளது.
அதேவேளையில், இலங்கை ரூபாயின் மதிப்பை உயர்த்தும் நோக்கத்தில் பொருட்களின் விலையை குறைப்பதால், இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் மொத்த விலையில் சுமார் 10% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் சர்க்கரை, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றின் மீதான மொத்த விலையில் கிலோவுக்கு ரூ. 30 குறைந்து இருக்கிறது என்று இந்த சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி பிரட் மீதும் விலையைக் குறைப்பதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் தெரிவித்து இருக்கின்றனர். 450 கிராம் எடை கொண்ட பிரட் விலையில் இன்று இரவு முதல் ரூ. 10 குறைத்துக் கொள்வதாக இந்த சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
பெருங்கடல்களில் 171 ட்ரில்லியன் பிளாஸ்டிக் குப்பைகள்; 2040க்குள் 3 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு!
கடந்த ஓராண்டுக்கும் மேலாக இலங்கை மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர். கொரோனா தொற்றுக்குப் பின்னர் ஏற்றுமதி குறைந்து, சுற்றுலா வருமானமும் இலங்கை அரசுக்கு குறைந்தது. இதனால், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு திண்டாடியது. அந்நிய செலாவணி இருப்பும் சுத்தமாக குறைந்து, விலை பொருட்களின் விலை விண்ணை எட்டியது.
இலங்கை மக்கள் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகினர். வருமானம் இல்லாமல், வேலை இல்லாமல், உண்ண உணவு இல்லாமல் மக்கள் நெருக்கடிக்கு தள்ளப்பட்டனர். இதையடுத்து அந்த நாட்டில் போராட்டம் வெடித்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது சூழல் சிறிது சிறிதாக சரி செய்யப்பட்டு வருகிறது. உலக வங்கியும் நிதி கொடுப்பதற்கு முன் வந்துள்ளது. இந்தியாவும், சீனாவும் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்துள்ளனர். இந்த நிலையில், பொருட்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியா - சீனா, இந்தியா - பாகிஸ்தான் மோதல் முற்றுகிறதா? அமெரிக்க உளவுத்துறை பகீர் அறிக்கை!!