சீனாவின் ஜி ஜின்பிங் இதுவரை இல்லாத வகையில் மூன்றாவது முறையாக சீன அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் இதுவரை இல்லாத வகையில் மூன்றாவது முறையாக வெள்ளிக்கிழமை பதவியேற்றார். சீனாவின் ரப்பர் ஸ்டாம்ப் பாராளுமன்றமான தேசிய மக்கள் காங்கிரஸின் (NPC) ஏறக்குறைய 3,000 உறுப்பினர்கள் ஜி ஜின்பிங் (Xi Jinping) அதிபராக ஒருமனதாக வாக்களித்தனர்.
தேர்தலில் வேறு வேட்பாளர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்காக கட்சியின் சட்டங்கள் சமீபத்தில் திருத்தி எழுதப்பட்டது. இதுவரை சீன வரலாற்றில் இவரைப் போல மூன்றாவது முறையாக யாரும் அதிபராக தேர்வு செய்யப்படவில்லை.
இதையும் படிங்க..இப்போ அடுத்த 13 பேர் எஸ்கேப்.! கட்சி தாவும் நிர்வாகிகள்.. காலியாகும் பாஜக கூடாரம் - அப்செட்டில் அண்ணாமலை