பெண்களின் அழகு சாதன பொருட்கள் என்று வரும் பொழுது, அதில் முதன்மையாக இருப்பது அவர்கள் தலையில் மாட்டிக் கொள்ளும் கிளிப் என்றால் அது மிகையல்ல. உலக அளவில் பல நாடுகளில், பல கோடி வகையான கிளிப்புகள் பெண்களால் தினமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் நாம் அன்றாட வாழ்க்கையில் சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் ஒரு பொருள், ஒரு கட்டத்தில் நம் உயிருக்கே உலை வைக்கும் அளவிற்கு ஒரு கொடிய ஆயுதமாக மாறிவிடுகிறது என்றால் அதை நம்மால் நிச்சயம் நம்ப முடியாது.
அப்படியிருக்க ஒரு பெண்மணி, தான் தலையில் மாட்டியிருந்த கிளிப் தன்னுடைய வாழ்க்கையை முடித்துவிடும் அளவிற்கு தன்னை கொண்டு சென்றுள்ளதாக ஒரு பதிவினை மருத்துவமனையில் இருந்து பதிவு செய்துள்ளார்.
கீழே உள்ள வீடியோவில் காணப்பட்டுள்ள அந்த பெண், வழக்கம்போல தனது பணிகளை கவனிக்க வீட்டிலிருந்து புறப்பட்டு தனது காரில் சென்றுள்ளார். அப்பொழுது வழக்கம்போல அவர் தலையில் ஒரு பிளாஸ்டிக் கிளிப் ஒன்றையும் அணிந்தபடி அவர் சென்றுள்ளார். அப்பொழுது அவர் சாலையில் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக அவருடைய கார் விபத்துக்குள் சிக்கி ஒரு சில முறை வண்டி சுழன்று ஓரிடத்தில் மோதி நின்றுள்ளது.
ஆனால் வண்டியில் இருந்த காற்று பைகள் அவரை காப்பாற்றிய நிலையில், திடீரென்று அவர் தலையில் இருந்து ரத்தம் அதிகமாக வழிவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். விபத்தில் சிக்கி மயக்கம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவருக்கு அடிபட்டது விபத்து ஏற்பட்டதால் என்றாலும், தலையில் ஏற்பட்ட அந்த பலத்த காயம் அவர் தலையில் அணிந்து இருந்த ஹேர் கிளிப்பினால் ஏற்பட்டது என்பது பிறகு தெரியவந்துள்ளது.
அவர் அந்த காருக்குள் உருண்டபோது அந்த கிளிப் அவருடைய தலைக்குள் ஆழமாக சென்றுள்ளது, இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர் தலையே பாதிக்கப்பட்ட நிலையிலும், அந்த கிளிப்பிற்கு ஒன்றும் ஆகவில்லை என்பதுதான்.
இதை தன் சமூக வலைதள கணக்கில் பதிவு செய்த அந்த பெண், ஒரு ஹேர் கிளிப் தனக்கு எமனாக நொடிகளில் மாறி உள்ளதை சுட்டிக்காட்டி பெண்களை உஷார் செய்துள்ளார்.
வெங்காயம் வெட்டும் போது இந்த எளிய தந்திரத்தை ட்ரை பண்ணுங்க...இனி அழமாட்டீங்க..!!