சிங்கப்பூரில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, டீனேஜராக இருந்து இளைஞனாக வளர்ந்த ஒரு ஆண், தன்னைச் சுற்றியிருந்த பலருக்கு பாலியல் ரீதியாக தொல்லைகொடுத்தது தற்போது தெரியவந்துள்ளது. சிறார்களில் தொடங்கி, பள்ளித் தோழர்கள் மற்றும் தேசிய சேவையில் உள்ள அவரது தோழர்கள் வரை பலரை அந்த நபர் நாசம் செய்துள்ளார்.
தற்போது 24 வயதாகும் அந்த நபர், சிறார்களை பாலியல் ரீதியாக சீண்டியது, அவர்களை கற்பழிக்க முயன்றது உள்ளிட்ட 10 குற்றச்சாட்டுகளில் இன்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 7) உயர்நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இவர் மேல் மொத்தம் 33 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவை அனைத்தும் இவருடைய தண்டையின்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
குற்றம் சாட்டப்பட்ட அந்த நபரால் சுமார் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், தனது 14 வயது முதல் 21 வயது அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு முதல்முதலாக அவர் தனது அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகளை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார் என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றது.
ஒருமுறை அந்த நபர் 14 வயதாக இருந்தபோது அருகில் வசித்து வந்த ஏழு வயது சிறுமியை கண்ணாமூச்சி விளையாடுவது போல் வேடிக்கைகாட்டி அவருடன் பாலியல் செயல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஒரு கட்டத்தில் குழந்தைகள் தங்களது பெற்றோரிடம் இவர் குறித்து கூறி விடுவார்களோ என்று பயந்து குழந்தைகளை விட்டுட்டு தன்னுடன் பயின்று வரும் மாணவர்களிடம் பாலியல் ரீதியாக இணைய முயற்சித்துள்ளார் அவர்.
3,000 ஆண்டுகள் பழமையான அரிய பொருள் கண்டுபிடிப்பு.. வேற்றுகிரக உலோகத்தால் செய்யப்பட்டதாம்!
அதேபோல அவர் தனது 19 மற்றும் 20ம் வயதில் தேசிய சேவையில் பணியாற்றியபோது, அவர் தனது தோழர்களை பாலியல் ரீதியாக அணுகியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் இதனை ஆண்டுகாலம் அந்த குற்றவாளியின் நடத்தை குறித்து பலருக்கு சந்தேகம் வந்துள்ளது, குறிப்பாக கடந்த 2012ம் ஆண்டிலேயே, அவர் பயின்ற மேல்நிலைப் பள்ளி அவருடைய நடத்தை குறித்து அவருடைய பெற்றோர்களுக்கு தெரிவித்து எச்சரிக்கையும் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில், குற்றவாளி தனது பழைய பள்ளி சீருடையை அணிந்துகொண்டு தான் பயின்ற மேல்நிலைப் பள்ளிக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து 13 வயது சிறுவனை குறிவைத்து, அவனை பாலியல் ரீதியாக சீண்டியபோது தான் அவர் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு போலீசாரிடம் புகார் அழைக்கப்பட்டது.
விரைவில் அவருக்கான தண்டனை அளிக்கப்படவுள்ள நிலையில், அந்த நபருக்கு 15 முதல் 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 6 பிரம்படி கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.