யார் இந்த நெவில் ராய் சிங்கம்? இவரது நிதி நெட்வொர்க் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டது எப்படி?

By SG Balan  |  First Published Aug 7, 2023, 4:36 PM IST

நியூயார்க் டைம்ஸ் விசாரணையின்படி, அமெரிக்கா தொழிலதிபரான நெவில் ராய் சிங்கம், சீனாவுக்கு ஆதரவான பிரசாரத்தைப் பரப்பவதற்காக நிதியை விநியோகிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.


நியூயார்க் டைம்ஸ் விசாரணையின்படி, அமெரிக்கா தொழிலதிபரான நெவில் ராய் சிங்கம், சீனாவுக்கு ஆதரவான பிரசாரத்தைப் பரப்பவதற்காக நிதியை விநியோகிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

1. 1954இல் மே 13ஆம் தேதி பிறந்த நெவில் ராய் சிங்கம் ஒரு தொழிலதிபர் மற்றும் சமூக ஆர்வலர். மென்பொருள் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான தாட்வொர்க்ஸ் (ThoughtWorks) நிறுவனத்தின் தலைவர்.

Tap to resize

Latest Videos

2. இவர் இலங்கையைச் சேர்ந்த அரசியல் அறிஞரும் வரலாற்றாசிரியருமான ஆர்க்கிபால்ட் விக்கிரமராஜ சிங்கத்தின் மகன். விக்கிரமராஜ சிங்கம் நியூயார்க் நகர பல்கலைக்கழகத்தின் புரூக்ளின் கல்லூரியில் அரசியல் அறிவியல் பேராசிரியராக இருந்தவர்.

சீனாவுக்காக இந்தியாவில் பிரசாரம் செய்த அமெரிக்க கோடீஸ்வரர்! சீன சதித் திட்டம் அம்பலமானது எப்படி?

3. 2017இல், நெவில் ராய் சிங்கம் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் ஜனநாயக அரசியல் ஆலோசகரான ஜோடி எவன்ஸை மணந்தார். இவர்கள் இருவருக்கும் ஜமைக்காவில் திருமணம் நடைபெற்றது.

4. நியூயார்க் டைம்ஸ் விசாரணை அறிக்கையின்படி, சீன பிரச்சாரத்தை ஆதரிக்கும் நெவில் ராயின் நிதி நெட்வொர்க் சிகாகோவில் இருந்து ஷாங்காய் வரை பரவியுள்ளது. அவர் இந்தியாவிலும் நியூஸ் கிளிக் என்ற செய்தி இணையதளத்திற்கு நிதியளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. அந்நிறுவனத்தின் அலுவலகம் அதிகாரிகளால் சோதனையிடப்பட்டிருக்கிறது.

5. பல தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க குழுக்கள் நெவில் ராய் அளிக்கும் நிதியுதவியைப் பெற்று அவரது ஆணையின் கீழ் சீன ஆதரவு கருத்துகளைப் பரப்புவதில் செயல்பட்டு வந்ததாகவும் நியூயார்க் டைம்ஸ் சொல்கிறது. இந்த பிரசாரக் குழுக்களுக்கு குறைந்தபட்சம் 275 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக அமெரிக்கத் தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கை சொல்கிறது.

இதுதான் சீனாவின் சிக்கலான பிரசார நெட்வொர்க்: வெளுத்து வாங்கிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

click me!