
வடகிழக்கு சீனாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் சூழந்துள்ளது. இந்த நிலையில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் உள்ள பாலத்தின் ஒரு பகுதியை அடித்துச் செல்லப்பட்டது. இந்த வெள்ளத்தால் உருவான பள்ளத்தில் கார் ஒன்று விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
அதிவேகமாக செல்லும் அந்த கார் பாலத்தின் பள்ளத்தில் விழுந்து தலைகீழாக கவிழ்வதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. அந்த வழியாக சென்றவர்கள், காரில் இருந்தவர்களை கயிறு மூலம் மீட்பதையும் பார்க்க முடிகிறது.கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தின் அளவை இந்த காட்சிகள் வெளிப்படுத்துகின்றன.
இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ இயற்கையின் அழிவு சக்தியை நினைவூட்டும் அதே வேளையில், தேவைப்படும் மற்றவர்களுக்கு உதவுவதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்த நபர்களின் தைரியத்தையும் மனித நேயத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது. இந்தச் சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள், உள்கட்டமைப்புத் தயார்நிலையின் முக்கியத்துவத்தையும், தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் அவசியத்தையும் நினைவூட்டும் வகையில் உள்ளன.
சீனாவின் ஷுலான் நகரில் டோக்சுரி சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வார இறுதியில் 14 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. வடகிழக்கு சீனா, பெய்ஜிங் மற்றும் ஹெபெய் மாகாணங்களில் இரண்டு வாரங்களுக்கு முன்பு தெற்கு புஜியான் மாகாணத்தில் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியதிலிருந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு ஜிலின், பெய்ஜிங் மற்றும் ஹெபே ஆகிய மாகாணங்களில் கனமழை காரணமாக 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். எனினும் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையை அதிகாரிகள் இன்னும் வழங்கவில்லை. வடகிழக்கு சீனாவின் முக்கிய நதியான Songhua மற்றும் Nenjiang துணை நதியின் பகுதிகள் ஆபத்தான உயர் மட்டத்தில் இருப்பதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
டோக்சுரி, வடக்கு நோக்கிச் செல்லும் முன், சீனாவின் பிரதான நிலப்பரப்பைச் புயல் தாக்கியது. இது கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத மோசமான புயல் என்று அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஜஸ்ட் மிஸ்! ராட்சத மீனுக்கு உணவு கொடுத்த பெண்.. பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. வைரல் வீடியோ