சீனாவுக்காக இந்தியாவில் பிரசாரம் செய்த அமெரிக்க கோடீஸ்வரர்! சீன சதித் திட்டம் அம்பலமானது எப்படி?

By SG Balan  |  First Published Aug 7, 2023, 1:46 PM IST

சீன கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் நெவில் ராய் கலந்துகொண்டதாகக் கூறப்படுவதையும் நியூயார்க் டைம்ஸ் சுட்டிக்காட்டுகிறது.


சீனாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துவந்த தன்னார்வக் குழுக்கள், தொண்டு நிறுவனங்கள், போலி நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் சமீபத்திய விசாரணை மூலம் அம்பலமாகியுள்ளன. இவை சீனாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

அமெரிக்க தொழிலதிபரான நெவில் ராய் சிங்கம் இந்த நெட்வொர்க்கின் முக்கியப் புள்ளியாக செயல்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் முன் நியூஸ்க்ளிக் என்ற ஊடக நிறுவனம் சுமார் ரூ.38 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றது தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் நடத்திய விசாரணை நடத்தியது. நியூயார்க் டைம்ஸின் விசாரணையில் அந்த நிறுவனம் நெவில் ராயிடம் இருந்து நிதி பெற்றிருப்பதும் அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரப் பிரிவோடு தொடர்பு கொண்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இந்த புதிய சதித் திட்டத்தைக் குறிப்பிட்டு, பிரதமர் மோடியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் இந்திய விரோத சக்திகள் செயல்படுவதாக பாஜக குற்றம்சாட்டுகிறது.

துபாயில் தூங்கிக்கொண்டிருக்கும் உலகின் மிகப்பெரிய ராட்டினம்! சுற்றுலா பயணிகள், வணிகர்கள் அதிருப்தி!

What are forces working against India?

➡️Foreign interests opposed to Indias rise hv "MOUs" wth parties (Eg Cong, CPM)

➡️ foreign fundng of media - exposes funding of Cong allied media in India

➡️ Weaponised misinformation is a real threat
https://t.co/huEwTaEuD6

— Rajeev Chandrasekhar 🇮🇳 (@Rajeev_GoI)

நெவில் ராயின் நிறுவனம் நியூஸ்கிளிக் என்ற டெல்லியில் உள்ள செய்தித் இணையதளத்திற்கு நிதியளித்திருப்பது நியூ யோர்க் டைம்ஸ் ரிப்போர்ட் மூலம் உறுதியாகியுள்ளது. அதன்படி, அந்த இணையதளம் சீன அரசுக்கு ஆதரவான செய்திகளை வெளியிட்டு வந்திருக்கிறது.

சீனா தனது நிலைப்பாட்டை நுட்பமாக பிரச்சாரம் செய்வதற்கும் விமர்சனங்களை திசைதிருப்புவதற்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும், ஊடகங்களையும் எவ்வாறு பயன்படுத்தியுள்ளது என்பதை இந்த விசாரணை அம்பலப்படுத்துகிறது எனவும் பாஜக சொல்கிறது.

நெவில் ராய் குழுக்கள் சீன சார்பு செய்திகளைப் பரப்பும் யூடியூப் வீடியோக்களை எவ்வாறு உருவாக்கியுள்ளன, அவை நிஜ உலக அரசியலையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை நியூயார்க் டைம்ஸ் விசாரணை நிரூபிக்கிறது. இந்த குழுக்கள் பல்வேறு நாடுகளில் அரசியல்வாதிகளுடன் சதித் திட்டங்களில் ஈடுபட்டு, போராட்டங்களை உருவாக்கி, தேர்தல்களில் செல்வாக்கு செலுத்தியுள்ளன என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

நெவில் ராய் தொடர்புகொண்டிருந்த நிறுவனங்கள் அமெரிக்க வெளிநாட்டு முகவர்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. இதுவும் வெளிநாட்டு சக்திகளுடன் அவை கொண்ட தொடர்புகள் குறித்து கேள்விகளை எழுப்புகின்றன. இந்த அமைப்புக்கள் மூலம் கணிசமான நிதிகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன என்றும் நெவில் ராய் அதனை மறைக்க முயற்சி செய்தார் எனவும் கூறப்படுகிறது.

சீனாவுக்காக வேலை செய்வதாகக் கூறுவதை நெவில் ராய் மறுத்தாலும், அவரது சீன தொடர்புகள் புதிராகவே உள்ளன. அவரது நெட்வொர்க் ஷாங்காய் பிரச்சாரத் துறையால் நிதியளிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறது, அந்த நெட்வொர்க்கின் உறுப்பினர்கள் சீனாவின் குரலை உலகிற்குப் பரப்ப மாணவர்களுக்கு கல்விக் கற்பிக்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் நெவில் ராய் கலந்துகொண்டதாகக் கூறப்படுவதையும் நியூயார்க் டைம்ஸ் சுட்டிக்காட்டுகிறது.

தோள்பையில் அடைத்து கடத்திய அரிய வகை ஸ்பைடர் குரங்குகள் மீட்பு! அமெரிக்க போலீஸ் நடத்திய அதிரடி ஆபரேஷன்!

click me!