தோள்பையில் அடைத்து கடத்திய அரிய வகை ஸ்பைடர் குரங்குகள் மீட்பு! அமெரிக்க போலீஸ் நடத்திய அதிரடி ஆபரேஷன்!

By SG Balan  |  First Published Aug 7, 2023, 10:09 AM IST

ஸ்பைடர் குரங்குகள் அருகிவரும் உயிரினமாகக் கருதப்படுகின்றன. அவை உலகில் அழிவுக்கு மிக நெருங்குமாக உள்ள 25 விலங்கினங்களில் ஒன்றாக உள்ளன.


அரிய வகை ஸ்பைடர் குரங்குகளை மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்குக் கடத்த முயன்ற நபரை கைது அமெரிக்க காவல்துறை கைது செய்துள்ளது. டெக்சாஸின் ஃபோர்ட் பிரவுன் ஸ்டேஷன் பகுதியில் அமெரிக்க எல்லைபுற ரோந்து படை நடத்திய சோதனையில் தோள்பைக்குள் ஏழு ஸ்பைடர் குரங்குகளை அடைத்து எடுத்துவந்த நபர் பிடிபட்டுள்ளார்.

அமெரிக்காவின் ரியோ கிராண்டே பள்ளத்தாக்கு பகுதியில் செயல்படும் ரோந்து படையின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில், கடத்தலில் ஈடுபட்ட நபர் பல துளைகள் கொண்ட ஒரு பையில் ஏழு குட்டி ஸ்பைடர் குரங்குகளை வைத்திருப்பதைக் காணமுடிகிறது.

Tap to resize

Latest Videos

"அழிந்து வரும் உயிரினமாக அறிவிக்கப்பட்ட விலங்கைக் கடத்த முயன்றதைத் தடுத்து நிறுத்தியதற்காக மிகவும் பெருமைப்படுகிறோம்!" என்றும் அந்த பேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட 7 ஸ்பைடர் குரங்குகளும் அமெரிக்க வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டன. குரங்குகளின் நிலை குறித்து அதிகாரிகள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

உலகாளவிய வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தின்படி, ஸ்பைடர் குரங்குகள் அருகிவரும் உயிரினமாகக் கருதப்படுகின்றன. அவை உலகில் அழிவுக்கு மிக நெருங்குமாக உள்ள 25 விலங்கினங்களில் ஒன்றாக உள்ளன.

click me!