எவ்ளோ தாகம் எடுத்தாலும் இதை மட்டும் செய்யாதீங்க... 20 நிமிடத்தில் 2 லிட்டர் தண்ணீர் குடித்த பெண் சாவு!

By SG Balan  |  First Published Aug 6, 2023, 9:54 AM IST

அமெரிக்காவில் 35 வயதான பெண் ஒருவர் 20 நிமிடத்தில் 2 லிட்டர் தண்ணீர் குடித்து, நீர் நச்சுத்தன்மை காரணமாக உயிரிழந்துள்ளார்.


அமெரிக்காவின் இண்டியானாவைச் சேர்ந்த ஆஷ்லே சம்மர்ஸ் என்பவர் கடந்த ஜூலை மாத இறுதியில் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றிருந்தார். அப்போது கொளுத்தும் வெயிலின் அவருக்கு நீரிழப்பு ஏற்பட்டுள்ளது. தாக்கத்தைத் தணிக்க அவர் நிறைய தண்ணீர் குடித்திருக்கிறார். எதிர்பாராத விதமாக அவர் குடித்த தண்ணீரே விபரீதமான விளைவை ஏற்படுத்தியுள்ளது.

"20 நிமிடத்தில் அவள் நான்கு பாட்டில் தண்ணீர் குடித்திருக்கிறாள்.ஒரு தண்ணீர் பாட்டில் அரை லிட்டர் இருக்கும். நான் பாட்டில் என்றால் சுமார் 2 லிட்டர் தண்ணீரை 20 நிமிடங்களுக்குள் குடித்திருக்கிறாள்" என்று ஆஷ்லேயின் மூத்த சகோதரர், டெவன் மில்லர் கூறுகிறார்.

Tap to resize

Latest Videos

இன்டர்நெட் இல்லாமலே மொபைலில் டிவி பார்க்க முடியுமா? புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டுவரும் மத்திய அரசு

இரத்தத்தில் சோடியத்தின் அளவு அசாதாரணமான அளவுக்குக் குறைவாக இருக்கும்போது ஹைபோநெட்ரீமியா எனப்படும் நீர் நச்சுத்தன்மை ஏற்படும் என்றும் அதனால்தான் ஆஷ்லே இறந்துவிட்டார் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

அரிதாக இருந்தாலும், நீர் நச்சுத்தன்மை ஆபத்தானது. குறுகிய காலத்தில் அதிக தண்ணீர் குடிக்கும்போது அல்லது சிறுநீரகங்கள் அதிகப்படியான தண்ணீர் இருந்தால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. தசைப்பிடிப்பு, வலி, குமட்டல் மற்றும் தலைவலி ஆகியவை நீர் நச்சுத்தன்மையின் அறிகுறிகள் ஆகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கோடை காலத்தில் அல்லது யாராவது வெளியில் வேலை செய்தாலோ அல்லது அடிக்கடி உடற்பயிற்சி செய்தாலோ அரிதாக இதுபோன்ற மரணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று நச்சுவியல் சிறப்பு மருத்துவர் டாக்டர் பிளேக் ஃப்ரோபெர்க் சொல்கிறார். எலக்ட்ரோலைட்கள், சோடியம் மற்றும் பொட்டாசியம் உள்ள பானங்களை குடிப்பது முக்கியம் எனவும்  அவர் வலியுறுத்துகிறார்.

தோஷ்கானா வழக்கில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை... அதிரடி கைது !! பாகிஸ்தானில் பரபரப்பு

click me!