தாறுமாறாக பரவும் Eris.. பயமுறுத்தும் புதிய வகை கொரோனா வைரஸ் - எச்சரிக்கும் வல்லுநர்கள்!

By Ansgar R  |  First Published Aug 6, 2023, 10:57 PM IST

உலக அளவில் பெருந்தொற்றின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வரும் அதே நேரத்தில், சில நாடுகளில் புதிய வகை கொரோனா வைரசுகள் பரவி மக்களை தொடர்ச்சியாக பீதியில் ஆழ்த்தி வருகின்றது என்று தான் கூறவேண்டும். 


அந்த வகையில் லண்டனில் உள்ள ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சியின் கூற்றுப்படி, கோவிட்-19ன் புதிய மாறுபாடு ஒன்று தற்போது லண்டன் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது என்று எச்சரித்துள்ளது. வேகமாக பரவி வரும் ஓமிக்ரானில் இருந்து வந்த Eris என்ற புனைப்பெயர் கொண்ட இந்த EG.5.1 என்ற கொரோனா மாறுபாடு, கடந்த மாதம் இங்கிலாந்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

''சர்வதேச அளவில், குறிப்பாக ஆசியாவில் அதிகரித்து வரும் பெருந்தொற்று வழக்குகள் காரணமாக, மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் ஒரு பகுதியாக, கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி இந்த EG.5.1 முதன்முதலில் கண்டறியப்பது. மேலும் தற்போது UKHSA (United Kingdom Health Security Agency) அளித்த தகவலின்படி, இந்த புதிய Eris மாறுபாடு இப்போது ஏழு பேரில் ஒருவருக்கு கண்டறியப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos

undefined

இறுதியாக கடந்த ஆகஸ்ட் 3 அன்று UKHSA வெளியிட்ட அறிக்கையின்படி, நாடு முழுவதும் COVID-19 வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்று கூறியுள்ளது. "ரெஸ்பிரேட்டரி டேட்டாமார்ட் சிஸ்டம் மூலம் எடுக்கப்பட்ட 4,396 மாதிரிகளில் 5.4% பேருக்கு கோவிட்-19 இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. முன்பு எடுக்கப்பட்ட 4,403 மாதிரிகளில் 3.7% பேருக்கு மட்டுமே பெருந்தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது என்று ஏஜென்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எவ்ளோ தாகம் எடுத்தாலும் இதை மட்டும் செய்யாதீங்க... 20 நிமிடத்தில் 2 லிட்டர் தண்ணீர் குடித்த பெண் சாவு!

இந்த புதிய Eris வகை கொரோனாவின் ஐந்து பொதுவான அறிகுறிகள், மூக்கு ஒழுகுதல், தலைவலி, சோர்வு, தும்மல் மற்றும் தொண்டை வலி ஆகியவை ஆகும். இது விரைவாகப் பரவி வருவதால் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 

“இந்த வார அறிக்கையில் கோவிட்-19 வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை நாங்கள் கண்காணித்து வருகின்றோம். மேலும் முதியவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படும் அளவில் சிறிய உயர்வையும் கண்டு வருகின்றோம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் ICUவில் பெரிய அளவில் மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் UKHSAன் நோய்த்தடுப்புத் தலைவர் டாக்டர் மேரி ராம்சே கூறினார்.

WHO டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், தடுப்பூசிகள் மற்றும் பிற பாதுகாப்பு அம்சங்களால் மக்கள் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டாலும், நாடுகள் தங்கள் பாதுகாப்பைக் கைவிடக்கூடாது என்று கூறியுள்ளார்.

Train accident : கோர ரயில் விபத்து.. பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு விபத்து - 30 பேர் பலியான சம்பவம்

click me!