மனமுடைந்து போன, பெயர் சொல்ல விரும்பாத கணவன் ஒருவர், தன் மனைவியின் மிக மோசமான ஆசைகளில் ஒன்றைப் பற்றியும், தன்னால் ஒப்புக்கொள்ளவோ முடியாத, மற்றும் யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாது ஒன்றை கூறிய மனம் திறந்துள்ளார்.
சுமார் பத்து ஆண்டுகளாக ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்த ஒரு கணவன் மற்றும் மனைவியின் வாழ்க்கையில் பேரிடியாக வந்து விழுந்தது, அந்த மனைவி தனது கடைசி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்ற தகவல். இன்னும் ஒன்பது அல்லது பத்து மாதங்களில் தனது மனைவி இறந்துவிடப் போகிறார் என்பதை அறிந்த அந்த கணவர் அவரை மகிழ்ச்சிபடுத்த தன்னால் இயன்ற அளவிலான அனைத்தையும் செய்துள்ளார்.
திருமணம் செய்ததிலிருந்து பல போராட்டங்களை கண்டு வந்த அந்த தம்பதி, சுமார் பத்து ஆண்டுகளாக அந்த தடைகளை எல்லாம் கடந்து வாழ்ந்து வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு இப்படி ஒரு சோக நிகழ்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சில மாதங்களில் தான் படுத்த படுக்கையாகிவிடுவோம் என்பதை எண்ணிய அந்த மனைவி ஒரு வித்தியாசனமான ஆசையை தனது கணவரிடம் நிறைவேற்றுமாறு கேட்டுள்ளார்.
ஜஸ்ட் மிஸ்! ராட்சத மீனுக்கு உணவு கொடுத்த பெண்.. பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. வைரல் வீடியோ
அதுதான் தனது முன்னாள் காதலருடன் ஒரு நாள் இரவை மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும் என்ற அந்த ஆசை, மேலும் தன்னை உடல் மற்றும் உள்ள ரீதியாக திருப்திபடுத்த தனது முன்னாள் காதலனால் மட்டுமே முடியும் என்று அவர் நினைத்தாக அந்த கணவர் கூறியுள்ளார். என்ன சொல்வது என்று அறியாது திகைத்துப் போன அந்த கணவன், சமூக வலைதளங்களில் பின்வருமாறு எழுதியுள்ளார்.. "ஒரு கணவனிடம் ஒரு மனைவி இப்படியும் ஒரு ஆசையை நிறைவேற்றி தரும்படி கேட்பாரா? என்பது குறித்து எனக்கு தெரியவில்லை, ஆனால் சாகும் தருவாயில் இருக்கும் ஒரு பெண், தனது முன்னாள் காதலருடன் உல்லாசமாக இருப்பது தான் தனக்கு சந்தோஷத்தை அளிக்கும் என்று கூறுகையில், தன்னால் அதை மறுக்க முடியவில்லை" என்று கூறி அந்த பதிவை அவர் முடித்துள்ளார்.
அவருடைய பதிவிற்கு பதில் அளித்துள்ள பல நெட்டிசன்கள், அவர் செய்தது தவறு என்றும், அவர் அந்த பெண்மணியை விவாகரத்து செய்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அதே சமயம் சிலர் அவருடைய பெருந்தன்மையை நினைத்து பாராட்டியும் உள்ளனர்.