குரோஷியாவில் விடுமுறை முடிந்து திரும்பிய பெண் தனது சூட்கேசை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஆஸ்திரியாவின், நாட்டர்ன்பாக் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிநாடு சென்றுவிட்டு, சனிக்கிழமை வீடு திரும்பினார். பிறகு பேக்கிங் செய்யப்பட்ட சூட்கேஸை திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். அந்த சூட்கேசில் 18 தேள்கள் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார் அந்த பெண்மணி.
undefined
மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
இதுகுறித்து செய்தியை வெளியிட்ட நியூயார்க் போஸ்ட் நிறுவனம், அந்த தேள்களை விலங்கு நல வாரியத்தை சேர்ந்தவர்கள் எடுத்து சென்றதாகவும், இப்போது அவற்றை அவற்றின் சொந்த குரோஷியாவுக்குத் திருப்பி அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். குரோஷியாவில் இருந்து தேள்கள் ஆஸ்திரியாவுக்கு வந்தது இது மூன்றாவது ஆகும் என்றும் கூறுகின்றனர். கடந்த மாதம், லின்ஸைச் சேர்ந்த ஒரு பெண், குரோஷியாவில் விடுமுறைக்குப் பிறகு, தனது குடியிருப்பில் ஒரு ஸ்டிங்கரைக் கண்டுபிடித்தார்.
மேலும் செய்திகளுக்கு..உண்மையான அதிமுக எடப்பாடி தான்.. மகிழ்ச்சியில் இருந்த இபிஎஸ் தரப்புக்கு 'ஓபிஎஸ்' கொடுத்த ட்விஸ்ட் !
சுமார் 2,000 வகையான தேள்கள் உள்ளன. அவற்றில் 30 முதல் 40 வரை மட்டுமே மனிதர்களைக் கொல்லும் அளவுக்கு வலிமையான விஷத்தைக் கொண்டுள்ளன. குரோஷியாவில் சில வகையான தேள்கள் மட்டுமே காணப்படுகின்றன, அவற்றில் எதுவுமே உயிருக்கு ஆபத்தானவை அல்ல. இருப்பினும், அவற்றின் கொட்டுதல் இன்னும் வலி, வீக்கம், அரிப்பு, சிவத்தல் மற்றும் எரியும் உணர்வை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு..படம் பாக்குறியா தம்பி.. 15 வயது சிறுவனுடன் ஓட்டம்பிடித்த 4 குழந்தைகளின் தாய் - அடேங்கப்பா.!