மீண்டும் கொரோனா.. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு !

By Raghupati R  |  First Published Jul 31, 2022, 4:30 PM IST

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஜோ பைடனை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது. இதற்கிடையே, அதிபர் ஜோ பைடன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டார் என அதிபரின் டாக்டர் கெவின் ஓகானர் தெரிவித்தார்.

Latest Videos

undefined

இந்நிலையில் அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அவர் அலுவல் பணிக்கு திரும்பிய மூன்றே நாட்களில் அவருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அறிகுறிகள் ஏதுமற்ற கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், வயதானவர்களுக்கு பொதுவாக காணக்கூடிய அறிகுறிகள் உள்ளது என்றும் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

கொரோனா சிகிச்சையின் ஒருபகுதியாக Paxlovid மருந்தை எடுத்துக் கொள்ளும் முதியவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிக்க வாய்ப்புள்ளதாக ஏற்கனவே எச்சரித்திருந்ததாகவும் மருத்துவக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. 79 வயதான அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், ‘மீண்டும் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மிகக் குறைவான எண்ணிக்கையிலான மக்களுக்கு இதுபோன்று மறுபடியும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம் எனவும், அறிகுறிகள் ஏதும் இல்லை என்றாலும், தமது சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்களின் நலன் கருதி தாம் தனிமைப்படுத்திக் கொள்கிறேன்’ என்றும் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஐந்து நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட அதிபர் ஜோ பைடன் செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..சந்தன கடத்தல் வீரப்பன் டூ டெல்லி காவல் ஆணையர்.. யார் இந்த சஞ்சய் அரோரா ?

click me!