இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ்சுக்கு 90% வெற்றி வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவியேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். சொந்த கட்சியினர் மத்தியிலேயே போரிஸ் ஜான்சனுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், கடந்த 7-ந் தேதி போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடைமுறை இங்கிலாந்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கான ரேசில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கும் இருக்கிறார். ஆரம்ப கட்டத்தில் முன்னிலையில் இருந்த ரிஷி சுனக் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறார். இறுதிப் போட்டியில் ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் மோத உள்ளனர். கட்சியின், 1.60 லட்சம் தொண்டர்கள் ஓட்டளித்து கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளனர். இதற்கான தேர்தல் செப்டம்பர் 5ம் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
இங்கிலாந்து புதிய பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் யார் வெற்றி பெறுவார் ? என்பது பற்றி ஸ்மார்கெட்ஸ் என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், லிஸ் டிரஸ் 89.29 சதவீதம் வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். அவரே இங்கிலாந்தின் புதிய பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று தெரிவித்து உள்ளது. இந்த போட்டியில் உள்ள இந்திய வம்சாவளி எம்.பியான ரிஷி சுனக் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு சுருங்கி, 10 சதவீதம் என்ற அளவில் மட்டுமே உள்ளது.
பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் ஆய்வின்படி, சுனக் மிகவும் பின் தங்கியுள்ளார். இந்த ஆய்வில், மற்ற வேட்பாளர்களுக்கு 1 சதவீத ஆதரவு கூட இல்லை. இதன்படி, கெய்ர் ஸ்டார்மர் 0.20 சதவீதமும், பென்னி மோர்டான்ட் 0.10 சதவீதமும் மற்றும் ஜெரேமி ஹன்ட் 0.10 சதவீதமும் பெற்று உள்ளனர். இதனால், இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் லிஸ் டிரஸ் வெற்றி பெற 90% வாய்ப்பு உள்ளது என அந்த ஆய்வு தெரிவித்து உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !