திடீரென தோன்றிய சிவப்பு ஒளி.. பதறிய விமானி - அட்லாண்டிக் கடலில் வினோத சம்பவம்..!

Published : Jul 30, 2022, 12:02 PM IST
திடீரென தோன்றிய சிவப்பு ஒளி.. பதறிய விமானி - அட்லாண்டிக் கடலில் வினோத சம்பவம்..!

சுருக்கம்

அட்லாண்டிக் பெருங்கடலில் மேலே பறந்து கொண்டிருந்தபோது விமானி ஒருவர் முன்னால் வானத்தில் சிவப்பு ஒளிரும் புள்ளிகள் இருந்தன. இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. 

அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்பட்ட 'விசித்திரமான' மற்றும் வினோதமான சிவப்பு ஒளியின் படம் இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது. ரெடிட் பயனரால் பகிரப்பட்ட இந்த படம் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்படும் மர்மமான சிவப்பு பளபளப்பு, இது போன்ற எதையும் தான் பார்த்ததில்லை என்று விமானி பதிவிட்டுள்ளார். 

இதை நெட்டிசன்கள் ரொம்ப வியப்புடன் பார்த்து வருகின்றனர். கடந்த 4 நாட்களில் இதற்கு பல லட்சம் லைக்குகள் குவிந்து வருகிறது. இது தொடர்பாக நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.  சவுரி மீன்களை பிடிப்பதற்காக இதுபோன்ற LED பேனல்கள் பொருத்தப்பட்டதாக ரெட் லைட்டுகளை பயன்படுத்தி இருக்கலாம் கூறுகின்றனர். 

மற்றொருவர் உலகத்தில் கடைசி கட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம் கூறியுள்ளனர். மற்றொருவர் இயற்கையின் அழகில் இதுவும் ஒன்று என்று தெரிவித்துள்ளனர்.  இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

இந்தியர்களுக்கு பெரிய அதிர்ச்சி.. டிசம்பர் 15 முதல் புது ரூல்ஸ்.. H-1B விசா நேர்காணல்கள் ரத்து.!
மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!