இந்தியாவின் அண்டை நாடான நேபாள நாட்டில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.0 ரிக்டர் அளவுகோலில் பதிவான இந்த நிலநடுக்கதினால், தலைநகர் பகுதியில் பல்வேறு வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன
இந்தியாவின் அண்டை நாடான நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து தென்கிழக்கு பகுதியில் 147 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. திக்தெல் பகுதியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இன்று காலை 7.58 மணியளவில் 6.0 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் நேபாளம், இந்தியா மற்றும் சீனாவில் சில பகுதிகளில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதி செய்துள்ளது. நிலநடுக்கத்தினால் வீடுகள் குலுங்கியதால், மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து அலறியடித்து ஓடி வந்து, தெருக்களில் தஞ்சம் அடைத்தனர்.
எனினும் இந்த நிலநடுக்கத்தினால், ஏற்பட்ட பொருளிழப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இன்னும் தகவல் வெளிவரவில்லை. மேலும் இடிப்பாடுகளில் சிக்கிய மக்களை மீட்டும் பணி நடைபெற்று வருகிறது.