முதல் உலகப் போரின்போது பிரிட்டிஷ் ராணுவத்தில் இடம்பெற்றிருந்த 22 இந்திய வீரர்கள் பகிரங்கமாக தூக்கிலிடப்பட்டனர்.
பிப்ரவரி 15, 1915 இல், 5வது லைட் காலாட்படை நேட்டிவ் பட்டாலியனின் இந்திய சிப்பாய் இஸ்மாயில் கான், சிங்கப்பூரில் பிரிட்டிஷ் ராணுவ கமாண்டராக இருந்த அதிகாரியை சுட்டுக் கொன்றார். இந்திய வீரர்கள் சிங்கப்பூரைக் கைப்பற்ற அதிக நேரம் எடுக்கவில்லை. உடனே ஜெர்மன் கைதிகள் விடுவிக்கப்பட்டனர், ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர். சிங்கப்பூரில் இருந்த இந்தியர் பலரும் போராட ஆயுதம் ஏந்தினர். பின்னர், ரஷ்யா மற்றும் ஜப்பானியப் படைகளின் உதவியால் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் சிங்கப்பூரை மீண்டும் கைப்பற்றினர்.
சம்பளத்துக்காக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் நடத்திய போராட்டத்தை ஆங்கிலேயர்கள் தொடக்கத்தில் நிராகரித்தனர். காலனிய வரலாற்று எழுத்தாளர்கள் இந்த நிகழ்வு முஸ்லிம்களின் மத உணர்வால் தூண்டப்பட்டது என்று சித்தரிக்க முயன்றனர். துருக்கிக்கு எதிரான போரினால் முஸ்லிம் வீரர்கள் மதவெறி உணர்வுகளை வளர்த்ததாகக் கூறப்பட்டது. 950 வீரர்களில் 900 பேர் முஸ்லிம்கள் என்பது அவர்களுடைய வாதத்திற்கு உதவியது. ஆனால், சிங்கப்பூரில் ஆங்கிலேயர்களுடன் போரிட்டதற்காக குறைந்தது 55 சீக்கிய வீரர்களும் ஏன் தண்டனைகளை எதிர்கொண்டார்கள் என்பதை அவர்கள் விளக்கவில்லை.
அவர்கள் மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தும் அறிக்கையில், சிங்கப்பூரில் கிளர்ச்சி செய்தவர்கள் "சந்தேகத்திற்கு இடமின்றி அமெரிக்க கதார் கட்சியைச் சேர்ந்த முகமதிய மற்றும் இந்து சதிகாரர்கள்தான்" என்று குறிப்பிட்டது. சில மாதங்களுக்கு முன்பு பம்பாயில் ஓர் அதிகாரியைக் கொன்றதற்கான தண்டனையாக சிங்கப்பூருக்கு மாற்றப்பட்ட 130வது பலுச்சிஸ் படைப்பிரிவும் இந்தக் கிளர்ச்சியில் பங்கேற்றது.
Indian Railways: வயதான பயணிகளுக்கு கருணை காட்டிய ரயில்வே!
இந்தியப் புரட்சியாளர்கள், முதல் உலகப் போரின் தொடக்கத்திலிருந்து, ஜெர்மனி மற்றும் துருக்கியின் உதவியுடன் பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிராக இந்திய சிப்பாய்களைத் தூண்டிவிட முயன்றனர். பாக் ஜதின், ராஷ் பிஹாரி போஸ், லாலா ஹர்தயாள், எம்.என்.ராய், உபைதுல்லா சிந்தி மற்றும் பலர் பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுத்தனர். பர்மா மற்றும் சிங்கப்பூரில் காலனித்துவ எதிர்ப்பைப் பரப்பியதற்காக கதார் கட்சியைச் சேர்ந்த சோகன் லால் பதக் கைது செய்யப்பட்டார்.
அக்டோபர் 1914இல், இந்திய வீரர்கள் சிங்கப்பூர் வந்தனர். தங்களுக்கு எதிரான இந்திய வீரர்களின் திட்டத்தை ஆங்கிலேயர்கள் நன்கு அறிந்திருந்தனர். ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகள் நடக்கக்கூடிய இடம் சிங்கப்பூர் என்று சந்தேகிக்கவில்லை. குஜராத்தி முஸ்லீம் தொழிலதிபரான காசிம் மன்சூர் மற்றும் இமாம் நூர் ஆலம் ஷா ஆகியோர் கிளர்ச்சிக்குத் தூண்டத் திட்டமிட்டனர். இந்த இருவரும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட கதார் கட்சி உறுப்பினர்கள். அவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ச்சி செய்ய வீரர்களுக்கு ஆலோசனை வழங்கினர். பிப்ரவரி 15, 1915 அன்று இந்தியர்கள் சிங்கப்பூரைக் கைப்பற்றினர்.
ஆங்கிலேயர்கள் இந்தக் கிளர்ச்சியை அடக்கிதும், ஆயிரக்கணக்கான மக்கள் முன்பு காசிம் மன்சூர் உள்பட 40க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் தூக்கிலிடப்பட்டனர். நூர் ஆலம் ஷாவும் நாடுகடத்தப்பட்டார். வீரர்களை வழிநடத்திய சுபேதர் தண்டி கானும் கொல்லப்பட்டார். மார்ச் 7 முதல் ரசூலா, இம்தியாஸ் அலி மற்றும் ரக்முதீன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏப்ரல் மாத இறுதிவரை இந்திய வீரர்கள் சீரான இடைவெளியில் பகிரங்கமாக தூக்கிலிடப்பட்டனர்.
இந்திய - அமீரக வர்த்தக உறவில் புதிய அத்தியாயம் தொடக்கம்
நாயக் முன்ஷி கான், நாயக் ஜாபர் அலி, முகமது பக்ஷ், ரஹீம் தாத், சுலிமான் கான், நவாப் கான், சுலிமான், ஜமால், பஹர் அலி, ஃபைஸ் முகமது, உம்ரத் அலி, ஷாபி முகமது, சுலைமான், லால் கான், ஷம்சுதீன், சைத் முகமது, அப்துல் கானி, பஷரத், ரஃபி முகமது, இனாயத், மோமன், நூர் முகமது ஆகிய 22 வீரர்கள் மார்ச் 25ஆம் தேதி ஒரே நேரத்தில் தூக்கில் போடப்பட்டார்கள்.
இந்தக் கலகம் கதார் கட்சித் தலைவர்களின் திட்டமிட்ட சதிச்செயல் என்றும் காசிம் மன்சூர், நூர் ஆலம் ஷா, முஜாதபா ஹுசைன் (முல் சந்த்) மற்றும் பலர் இதில் முக்கியப் பங்காற்றியதாகவும் விசாரணையில் தெரியவந்தது. ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, இந்திய தேசிய அரசாங்கமும் ராணுவமும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் உருவாக்கப்பட்டது.
அதிர்ச்சி... ஹன்சிகா வேகமாக வளர்வதற்க்கு ஹார்மோன் ஊசி போட்டாரா அவரின் தாயார்? பரபரப்பு தகவல்!