ஜப்பானியப் பெண் ஒருவர் தமிழ் பாடல் ஒன்றுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பல வீடியோக்கள் வைரலாவது உன்டு. விலங்குகள் சேட்டை, குழந்தைகளின் க்யூட் வீடியோ என பல உண்டு.
இந்த வகையில் ஜப்பானை சேர்ந்த பெண் ஒருவர் பிரபல தமிழ் பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மாயோ ஜப்பான் என்ற ஜப்பானியப் பெண், இந்தியப் பாடல்களுக்கு நடனமாடும் வீடியோக்களை அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க..Rishab Shetty : தாதா சாகேப் பால்கே விருது பெறுகிறாரா காந்தாரா பட புகழ் ரிஷப் ஷெட்டி - உண்மையா.? நடந்தது என்ன.?
விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த எனிமி படத்தில் இடம்பெற்றுள்ள ‘டும் டும்’ பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார். எஸ்.தமன் இசையமைத்துள்ள இந்த பாடல், ஏற்கனவே ஹிட்டடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவில் மாயோ ஜப்பான், ஜாஸ்மின் தங்கோத்ராவுடன் ஒரே மாதிரியான ஆடைகளில் ஆடியுள்ளார்கள். நெட்டிசன்கள் இந்த வீடியோவை கொண்டாடி வருகின்றனர்.
இந்த வீடியோ ஒரு நாளுக்கு முன்பு பகிரப்பட்டது. இந்த வீடியோ இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் பெற்று வரவேற்பை பெற்று வருகிறது. வைரலான வீடியோவை இங்கே பாருங்கள் :
இதையும் படிங்க..தரக்குறைவான வார்த்தையை உச்சரித்த பிரபல நடிகர்.. அஜித் குமாரை கண்டிக்கும் தமிழக பாஜக - சர்ச்சையில் துணிவு!