காண்டாக்ட் லென்ஸ் அணிந்து தூங்கியவரின் கண்களை அரிய வகை ஒட்டுண்ணிகள் தின்னத் தொடங்கியதால், அவருக்கு ஒரு கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கண்ணில் கான்டாக்ட் லென்ஸ் அணிந்தபடியே தூங்கியதால் ஒரு கண்ணில் பார்வையை இழந்துவிட்டார்.
21 வயதான மைக் க்ரம்ஹோல்ஸ் காண்டாக்ட் லென்ஸ் அணிந்து தூங்கி இருக்கிறார். இதனால் அவரது கண்களில் அரிய வகையான சதை உண்ணும் ஒட்டுண்ணி உருவாகி, கண்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவிட்டது. அவரது வலது கண்ணில் பார்வையே பறிபோகும் அளவுக்கு விபரீதம் ஆகிவிட்டது.
இதுபற்றி விவரிக்கும் மைக், நான் கடந்த ஏழு ஆண்டுகளாக காண்டாக்ட் லென்ஸ் அணிந்து வருகினேன். ஆனால், ஒருநாள் தூங்கும்போது, காண்டாக்ட் லென்ஸ்களை கழற்றி வைக்க மறந்துவிட்டேன். லென்ஸை அகற்ற மறந்தால் கண்ணில் வலி ஏற்படுவதோ கண்கள் சிவப்பமாக மாறுவதோ சகஜம்தான். ஆனால், இந்த முறை நிலைமை மோசமாகிவிட்டது.” என்கிறார்.
மைக்கின் வலது கண்ணில் அகந்தமோபா கெராடிடிஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அவர் காண்டாக்ட் லென்ஸ்களை அணிந்துகொண்டே தூங்கிவிட்டார் என்பதால்தான் அகாந்தமோபா கெராடிடிஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று மருத்துவர்கள் சொல்கின்றனர்.
ஜார்ஜ் சோரஸ் ஆபத்தானவர்! மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
அகந்தமோபா கெராடிடிஸ் என்பது அரிய வகையான சதை உண்ணும் ஒட்டுண்ணி ஆகும். இது கண்களில் நுழைந்து திசுக்களை தின்று பார்வையைச் சிதைத்துவிடும்.
கல்லூரியில் படிக்கக்கூடிய வயதில் இப்படி அபூர்வ தொற்றினால் பாதிக்கப்பட்டதை எண்ணி நொந்தபோய் இருக்கும் மைக், 10 ஆயிரம் டாலர் நிதி உதவி கோரி இருக்கிறார். இதுவரை 1000 டாலர் நிதி கிடைத்துள்ளது.
இப்போது அவர், கான்டாக்ட் லென்ஸ்கள் அணிபவர்கள் தூங்கும் போதோ குளிக்கும் போதோ கான்டாக்ட் லென்ஸை ஞாபகமாகக் கழற்றி வையுங்கள். லென்ஸ் அணிந்தபடியே குளிக்கவோ தூங்கவோ வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகிறார்.
இந்திய - அமீரக வர்த்தக உறவில் புதிய அத்தியாயம் தொடக்கம்