அமெரி்க்காவின் சர்வதேச முதலீ்ட்டாளர் ஜார்ஜ் சோரஸ் வயதானவர், கோடீஸ்வரர், எந்தக் கருத்தையும் வலுவாக வலியுறுத்துபவர், ஆபத்தானவர், தன்னுடைய கருத்தை செயல்படுத்தவே முதலீடு செய்வார் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரிக்கை செய்தார்
அமெரி்க்காவின் சர்வதேச முதலீ்ட்டாளர் ஜார்ஜ் சோரஸ் வயதானவர், கோடீஸ்வரர், எந்தக் கருத்தையும் வலுவாக வலியுறுத்துபவர், ஆபத்தானவர், தன்னுடைய கருத்தை செயல்படுத்தவே முதலீடு செய்வார் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரிக்கை செய்தார்
அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த தில்லுமுல்லு, மோசடிகள் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அம்பலப்படுத்தி அறிக்கையாக வெளியிட்டது. அதானி குழுமத்தின் மோசடிகள் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஜார்ஜ் சோரஸ் பேச்சு இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: ஸ்மிருதி இரானி கொந்தளிப்பு
இந்நிலையில் முனிச் நகரில் நடந்த முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கோடீஸ்வரர், சர்வதேச முதலீட்டாளர் 92வயதான ஜார்ஜ் சோரஸ்ஸ் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் “ ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழுமப் பங்குகள் சரிந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார்.
பிரதமர் மோடி தொடர்புடைய அதானி குழுமத்துடன் தொடர்பில் இருப்பதால், இந்தியாவில் ஜனநாயகரீதியான மறுமலர்ச்சிக்கான கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மவுனமாக இருக்கும் மோடி, அந்நிய முதலீட்டாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
பறிபோன சிவசேனா கட்சி| உத்தவ் தாக்கரே நிர்வாகிகளுடன் இன்று அவசர ஆலோசனை
இது குறித்து நேற்று சிட்னியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில் “அமெரி்க்காவின் சர்வதேச முதலீ்ட்டாளர் ஜார்ஜ் சோரஸ் வயதானவர், கோடீஸ்வரர், எந்தக் கருத்தையும் வலுவாக வலியுறுத்துபவர், ஆபத்தானவர், தன்னுடைய கருத்தை செயல்படுத்தவே முதலீடு செய்வார்
முழு உலகமும் எவ்வாறு இயங்குகிறது என்பதை தனது கருத்து தீர்மானிக்க வேண்டும் என்று எண்ணுபவர்.
அந்த வயதான, கோடீஸ்வரர், கருத்துக்களை வலுவாக எடுத்துக்கூறும் அவர் பற்றி மட்டும் பேச முடிந்தால் அதை விட்டுவிடுவேன். ஆனால், வயதானவர், பணக்காரர், தனது கருத்துக்களை வலுயுறுத்த எதுவேண்டுமானாலும் செய்யக்கூடியவர், மற்றும் ஆபத்தானவர்.
சில ஆண்டுகளுக்கு முன் இதே மாநாட்டில், லட்சக்கணக்கான முஸ்லிம்களின் குடியுரிமையை இந்தியா பறிக்க திட்டமிட்டிருப்பாக இந்தியா மீது குற்றம்சாட்டினார். அந்நியச்சக்திகள் நம்நாட்டு விவகாரத்தில் தலையிட்டால் என்ன நடக்கும் , அதன் ஆபத்துகள் குறித்து நாம் அறிவோம். ஆனால், கோடிக்கணக்கான மக்களின் குடியுரிமை பறிக்கப்படுவது போல, இதுபோன்ற அச்சுறுத்தலை நீங்கள் செய்தால், அது யதார்தத்தில் நமது சமூக கட்டமைப்பிற்கு உண்மையான கேடு விளைவிக்கும்.
‘எம்பாஸ்போர்ட் போலீஸ் ஆப்’ என்றால் என்ன|வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் புதிய அறிமுகம்
தாங்கள் விரும்பும் நபர் தேர்தலில் வென்றால், தேர்தல் நியாயமான தேர்தல் என இவரைப் போன்றவர்கள் என்ன நினைக்கிறார்கள். இவர்களின் கருத்துக்கு, நினைப்பிற்கு மாறாக தேர்தல் நடந்து முடிவுகள் வேறுவிதமாக வந்தால், அது மோசமான ஜனநாயகம் என்று கூறுகிறார்கள்.
உலகமயமாக்கல் தடையற்ற வாய்ப்புகளை அனுமதிக்கிறது, ஆனால் எண்ணங்களை வடிவமைக்கவும், பணம் வரவும், நிறுவனங்கள் தங்கள் நிகழ்ச்சி நிரலைப் பற்றி அறிந்து கொள்ளவும் அனுமதிக்கிறது. இவை அனைத்தும் வெளிப்படைத் தன்மை கொண்ட ஒரு திறந்த சமூகத்தின் வாதத்தின் கீழ் செய்யப்படுகிறது
இவ்வாறு ஜெய் சங்கர் தெரிவித்தார்