இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.4 என்ற ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் உள்ள தனிம்பார் தீவுகளில் இன்று 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் உள்ள தனிம்பார் தீவுகளில் இன்று (வியாழக்கிழமை) நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுனாமி சாத்தியம் இல்லை என்று நாட்டின் புவி இயற்பியல் நிறுவனம் கூறியது.
நிலநடுக்கத்தின் மையம் 97 கிமீ (60.27 மைல்) ஆழத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளது. இது மலுகுவின் தலைநகரான அம்போனிலிருந்து தென்கிழக்கே 543 கி.மீ தொலைவில் அமைந்திருந்தது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் பற்றிய உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை. அதுமட்டுமல்லாமல், நிலநடுக்கம் பற்றிய கூடுதல் தகவல் அதிகாரபூர்வமாக இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
இந்தோனேசியா "பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர்" என்று அழைக்கப்படும் நில அதிர்வு மண்டலம், பூமியின் மேலோட்டத்தில் வெவ்வேறு தட்டுகள் சந்தித்து அடிக்கடி நிலநடுக்கங்களை உருவாக்குகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க..Karnataka : யாத்திரையை கையில் எடுத்த பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம்..! கர்நாடகா தேர்தல் ரேஸில் முந்துவது யார்.?