Karachi Attack: பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள போலீஸ் தலைமையகத்தை தாக்க முயன்ற தெஹ்ரீக் இ தலிபான் (பாகிஸ்தான்) தீவிரவாதிகள் 5 பேரை போலீஸார் சுட்டுக்கொன்று, அலுவலகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Karachi Attack: பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள போலீஸ் தலைமையகத்தை தாக்க முயன்ற தெஹ்ரீக் இ தலிபான் (பாகிஸ்தான்) தீவிரவாதிகள் 5 பேரை போலீஸார் சுட்டுக்கொன்று, அலுவலகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மக்கள் நெருக்கம் மிகுந்த பரபரப்பான கராச்சி நகரில் போலீஸ் தலைமையகத்தைக் கைப்பற்ற தலிபான் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்த சதியை பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்தனர்.
undefined
தீவிரவாதிகளுக்கு எதிரான இந்த ஆப்ரேஷனை நேற்று மாலை 6 மணிக்கு பாதுகாப்புப்படையினர் தொடங்கி ஏறக்குறைய 4 மணிநேரம் நடத்தினர். இறுதியில் 5 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த ஆப்ரேஷனில் 2 போலீஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட 4பேர் கொல்லப்பட்டனர்.
உலக நாடுகளில் அதிக வளர்ச்சியை அடையப்போவது இந்தியாதான் - ரே டாலியோ கருத்து
தலிபான் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் கடும் துப்பாக்கிச்சண்டை நீடித்ததால், அப்பகுதியை பாதுகாப்புப்படையினர் சுற்றிவளைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கராச்சி போலீஸ் தலைமை அலுவலகம் 5 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டிடம் முழுவதும் நேற்று இரவு 10.30 மணிவரை துப்பாக்கி குண்டுகள் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இருதரப்பினருக்கும் இடையிலான கடும் துப்பாக்கிச் சண்டையில் கட்டிடத்தில் பல இடங்கள் சேதமடைந்தன.
சிந்து மாநில அரசின் செய்தித்தொடர்பாளர் முர்தசா வஹாப் கூறுகையில் “ கராச்சி போலீஸ் தலைமை அலுவலகத்தை தீவிரவாதிகள் கைப்பற்ற முயன்ற நடவடிக்கை முறியடிக்கப்பட்டது. 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 2 போலீஸார் உள்ளிட்ட 4 பேர் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
17 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நாளை காலை(இன்று) கட்டிடம் முழுவதையும் போலீஸார் ஆய்வு செய்யும்போது, எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என்ற விவரம் தெரியவரும். போலீஸார் கணக்கின்படி 8 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது” எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் மக்களுக்கு அதிர்ச்சி! பெட்ரோல், டீசல், கேஸ் விலை வரலாற்று உயர்வு
தெற்கு டிஐஜி இர்பான் பலூச் கூறுகையில் “ போலீஸ் தலைமை அலுவலகத்துக்குள் இன்று(நேற்று) இரவு 7.10 மணிக்கு இரு கார்கள் வந்தன. அதில் பின்பக்க வாயிலுக்குள் வந்த காரின் கதவுகள் திறந்தே உள்ளன. முன்பக்க வாயில் வழியாக வந்த கார் கதவுகள் திறக்கப்படவில்லை. காரில் வெடிகுண்டுகள் இருக்கிறதா என்பது குறித்து வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனையிட உள்ளனர்” எனத் தெரிவித்தார்
கராச்சி போலீஸ் தலைமை அலுவலகத்துக்குள்ளே தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தியது போலீஸாருக்கு கவலையையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டிக்காக வெளிநாட்டு வீரர்கள் போலீஸ் அலுவலகத்தைச் சுற்றியுள்ள ஹோட்டல்களில் தங்கியுள்ளனர். தீவிரவாதிகளுக்கு எதிரான இந்த தாக்குதலால் அவர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளதாரம்! பால் லிட்டர் ரூ.210, கோழி இறைச்சி கிலோ ரூ.800!
சிந்து மாகாண முதல்வர் சயத் முராத் அலி ஷா கூறுகையில் “ இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டிகள் எந்தவிதத்திலும் பாதிக்காது, தொடர்ந்து நடத்தப்படும். வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போட்டி நடக்கும் அரங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவி்த்தார்
பாகிஸ்தான் அரசுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முறிந்தது.இதன்பின், தீவிரவாதிகள் அப்பாவி மக்கள் மீதும், அரசு அலுவலகங்கள் மீதும் ஈவுஇரக்கமின்றி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.