இந்திய - அமீரக வர்த்தக உறவில் புதிய அத்தியாயம் தொடக்கம்

Published : Feb 18, 2023, 02:53 PM ISTUpdated : Feb 18, 2023, 03:56 PM IST
இந்திய - அமீரக வர்த்தக உறவில் புதிய அத்தியாயம் தொடக்கம்

சுருக்கம்

இந்தியா - ஐக்கிய அரபு அமீரக வர்த்தகக் கவுன்சில் ஒப்பந்தத்தின் பகுதியாக அமீரகப் யூ.ஏ.இ. சேப்டர் (UAE Chapter) என்ற வர்த்தகப் பிரிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியா - ஐக்கிய அரபு அமீரக வர்த்தகக் கவுன்சில் ஒப்பந்தத்தின் பகுதியாக இருநாட்டு வர்த்தக உறவை மேம்படுத்த அமீரகப் யூ.ஏ.இ. சேப்டர் (UIBC-UC) என்ற வர்த்தகப் பிரிவு துபாயில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

அமீரகத்துக்கான இந்தியத் தூதர் சஞ்சய் சுதீர், துணைத் தூதர் அமன் பூரி ஆகியோர் முன்னிலையில் அமீரக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தானி பின் அஹ்மத் அல் ஜீயோதி இந்த வர்த்தகப் பிரிவைத் தொடங்கி வைத்தார்.

இந்த அமைப்பு அமீரக தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் கண்காணிப்பின் கீழ் இயங்கும். இந்த வர்த்தகப் பிரிவின் அலுலவகம் அபுதாபியில் செயல்படும். அமீரகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்பைகள் இந்த அமைப்பின் மூலம் உருவாக்கப்படும்.

Ray Dalio: உலக நாடுகளில் அதிக வளர்ச்சியை அடையப்போவது இந்தியாதான் - ரே டாலியோ கருத்து

Indian Railways: வயதான பயணிகளுக்கு கருணை காட்டிய ரயில்வே!

இந்த வர்த்தகப் பிரிவின் தலைவராக கே.எப்.சி. ஹோல்டிங்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பைசல் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் UIBC-UC தொக்க விழாவில் பங்கேற்றுப் பேசுகையில், "இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ளக்கூடிய வர்த்தகத் திட்டங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும்." என்றார். மேலும், பெரிய உள்கட்டமைப்பு திட்டங்கள், தொழில்நுட்ப உற்பத்தி போன்ற துறைகளில் முதலீடுகள் அதிகரிக்கவும், இந்திய உற்பத்தியாளர்கள் உலக அளவில் வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் உதவவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை 100 பில்லியன் டாலர் வரை விரிவுபடுத்தவும் அமீரகத்தில் இருந்து புதிதாக 75 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளைக் இந்தியாவுக்குக் கொண்டுவரவும் இந்த வர்த்தக ஒப்பந்தம் வழிவகுக்கும்.

Karachi Attack:பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை| கராச்சி போலீஸ் தலைமையக தாக்குதலில் அதிரடி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியா எந்த மாயையிலும் இருக்கக்கூடாது..! பதிலடி முன்பை விட இன்னும் பயங்கரமா இருக்கும்..! அசிம் முனீர் மிரட்டல்..!
இந்தியா-ரஷ்யா நட்பால் வயிற்றெரிச்சல்..! கதறப்போகும் தென்னிந்திய விவசாயிகள்..! டிரம்ப் எடுத்த அதிர்ச்சி முடிவு..!