china: langya virus: henipavirus: சீனாவில் புதிய ‘ லாங்யா ஹெனிபா வைரஸ்’ பரவல்: 3 அறிகுறிகள் என்ன?

By Pothy Raj  |  First Published Aug 10, 2022, 9:40 AM IST

சீனாவில் ஷான்டாங் மற்றும் ஹெனன் மாகாணத்தில் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் புதிய லாங்யா ஹெனிபா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரலால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


சீனாவில் ஷான்டாங் மற்றும் ஹெனன் மாகாணத்தில் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் புதிய லாங்யா ஹெனிபா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரலால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸால் மனிதர்களுக்கு எந்த மாதிரியான பாதிப்பு வரலாம் என்று மருத்துவர்கள் கூறியிருந்தாலும் இது உயிர்கொல்லியா என்பது குறித்து உறுதியாகத் தெரிவிக்கவி்ல்லை. இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்தும் இல்லை. 

Tap to resize

Latest Videos

இந்த வைரஸுக்கு லாங்யா ஹெனிபாவைரஸ் அல்லது லேவி என்று பெயரிடப்பட்டுள்ளது. கிழக்குச் சீனாவில் உள்ள ஷான்டாங், ஹெனன் மாகாணத்தில் உள்ள பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் இந்த வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது.

புதிய வகை வைரஸ் பரவலை சீனாவின் அரசு ஊடகமான தி குளோபல் டைம்ஸ், தைவானின் நோய் தடுப்பு மற்றும்பாதுகாப்பு மையம் ஆகியவை உறுதி செய்துள்ளன. 

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசிக்கு தடை: பதிலடி தரத் தொடங்கியது சீனா

மனிதர்களுக்கு என்ன பாதிப்பு 

மருத்துவ வல்லுநர்கள், ஆய்வாளர்கள் தரப்பில் கூறுகையில் “ ஆசியா, ஆஸ்திரேலியாவில் வவ்வால்களில் இருந்து பெரும்பாலும் ஹெர்னிபாவைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. சீனாவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட லாங்யா ஹெனிபாவைரஸும் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய வைரஸாகும்.

இந்த  வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், உடல் சோர்வு, இருமல், வாந்தி, உணவின் சுவை தெரியாமல் போகுதல், உடல்வலி, குமட்டல் போன்றவை ஏற்படும். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தசிவப்பனு குறையலாம், பிளேட்லெட் எண்ணிக்கை குறையலாம்,  சிறுநீரகப் பாதிப்பும், நுரையீரல் செயல்இழப்பும் ஏற்பட்டு, உயிரிழப்பைச் சந்திக்கலாம்” எனத் தெரிவித்துள்ளனர்.

வங்கதேசத்தில் பெட்ரோல், டீசல் விலை 51% அதிகரிப்பு: பங்குகளுக்கு படையெடுத்த மக்கள்

தடுப்பூசி இல்லை
 இப்போதுள்ள சூழலில் ஹெனிபாவைரஸுக்கு எந்தவிதமான தடுப்பூசியும், தடுப்பு மருந்தும் இல்லை. இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மட்டுமே அளிக்க முடியும். லாங்யா ஹெனிபா வைரஸ் மனிதர்களை கொல்லும் மோசமான வைரஸ் என்று தொடக்கத்திலேயே கூற இயலாது. ஆதலால் அச்சப்படத் தேவையில்லை என்று டியூக் என்யுஎஸ் ஆய்வு மையத்தின் பேராசிரியர் வாங் லின்பா தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இயற்கையிலிருந்து புதிதாக வைரஸ்கள் உருவாவதால் மனிதர்கள் எச்சரி்கையுடன் இருப்பதும், பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவதும் அவசியம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
தைப்பே டைம்ஸ் நாளேடு வெளியிட்ட செய்தியில் “ ஏ ஜூனாட்டிக் ஹெனிபாவைரஸ் இன் பெப்ரைல் பேசன்ஸ் இன் சைனா” என்ற தலைப்பில் கடந்த 4ம் தேதி கட்டுரை வெளியாகியுள்ளது.

இலங்கை வரும் சீன உளவுக் கப்பல்; இந்தியாவுக்கு பீஜிங் அளித்த சீற்றமான பதில்!!

எப்படி பரவுகிறது

அந்த கட்டுரையில் இந்த விவரங்கள் தரப்பட்டுள்ளன. விலங்குகளில் இருந்து மட்டுமே மனிதர்களுக்கு ஹெனிபாவைரஸ் பரவும். அதாவது விலங்குகளிடம் நேரடித் தொடர்பு வைத்துள்ளவர்கள், உணவு, நீர், சுற்றுச்சூழல் ஆகிய காரணமாகவும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!