சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே ஒரே தீர்வு என இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். இலங்கை துறைமுகத்தில் சீன உளவுக் கப்பல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சீனாகாரன் வாலை ஒட்ட நறுக்க வேண்டும் என்றால் தனி தமிழ் ஈழமே தீர்வு .. சிவாஜிலிங்கம் ஆவேசம். சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தனி ஈழமே ஒரே தீர்வு என இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். இலங்கை துறைமுகத்தில் சீன உளவுக் கப்பல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு அந்நாடு சொல்லொணா துயரத்திற்கு ஆளாகி வருகிறது. இந்தியா அந்நாட்டிற்கு தேவையான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், கோடிக்கணக்கில் நிதி கொடுத்து உதவி வருகிறது. இது ஒருபுறம் உள்ள நிலையில் அந்நாட்டில் துறைமுகத்தில் சீனா உளவு கப்பலை நிறுத்தியிருப்பது இந்தியாவுக்கு பல்வேறு சந்தேகத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வலுவாக உள்ளதை இது மீண்டும் உணர்த்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: இரட்டை இலையை முடக்கி! ரஜினியை முன்னிறுத்தி பாஜக தலைமையிலான கூட்டணி.. பகீர் கிளப்பும் முன்னாள் எம்.பி..!
தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் சீனா உளவு கப்பல் விவகாரம் குறித்து இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இது குறித்து முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறிய விவரம் பின்வருமாறு:- கோத்தபய ராஜபக்சே அதிபராக இருந்தபோது சீன கப்பல்களுக்கு இலங்கை துறைமுகத்தில் அனுமதி அளித்துள்ளார், ஆனால் தற்போது இந்தியாவின் தொடர் அழுத்தத்தால் கப்பலுக்கு இலங்கை அதிபர் விக்ரமசிங்க அனுமதி மறுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்: தொகுதி தான் என் திருக்கோயில்... ஓட்டு போட்ட மக்கள் தான் என் தெய்வம் ... திராவிட மாடல் துரைமுருகன்.
ஆனால் கப்பலின் பயணம் என்பது தொடர்கிறது, அந்த கப்பல் இலங்கைக்கு வந்ததில்தான் தாமதமே தவிர பயணம் பாதிக்கவில்லை என்றார், மொத்தத்தில் இலங்கை தனது சர்வதேச வெளியுறவு கொள்கையில் தெளிவில்லாமல் உள்ளது, நேரத்துக்கு ஏற்ற போல இந்தியாவுடனும் இருப்போம் சீனாவுடனும் இருப்போம் என முடிவெடுத்து வருகிறது. ஆனால் இந்தியா இதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது, இலங்கை தனது சர்வதேச நிலைப்பாட்டில் தெளிவாக இருக்க வேண்டும். அதேபோல் இலங்கையில் வடக்கில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு தலையிட்டு சுதந்திரமான வாக்கெடுப்பை நடத்த வழிவகை செய்ய வேண்டும்.
பொது வாக்கெடுப்பு நடைபெறும் வரை ஈழத்தமிழர்கள் பகுதிகளை ஈழத்தமிழர்களை ஆளும் வகையில் இடைக்கால நிர்வாகத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் ஒட்டுமொத்தத்தில் இலங்கையில் சீனாவின் இது போன்ற ஆதிக்கத்தை தடுக்க தனித் தமிழ் ஈழமே ஒரே தீர்வு, இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை இந்தியா விரும்பவில்லை, இலங்கையில் மக்கள் சாலையோரங்களில் வசித்து வரும் நிலையில் பல நூறு கோடி ஏழை இந்தியா உதவியது, இந்த உதவிகளுக்கு காரணம் இல்லாமல் இல்லை, இதை உணர்ந்து இலங்கை அரசு செயல்பட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.