இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நேற்று இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா செய்து இருந்த நிலையில் இன்றும் இரண்டு அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இந்த நிலையில், ''இனிமேல் ஆட்சி நடத்த முடியாது என்று எப்போது உணருகிறேனோ அப்போது பதவியை ராஜினாமா செய்வேன். அதுவரை என்னுடைய பணிகள் தொடர்ந்து நடைபெறும்'' என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நேற்று இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா செய்து இருந்த நிலையில் இன்றும் இரண்டு அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இந்த நிலையில், ''இனிமேல் ஆட்சி நடத்த முடியாது என்று எப்போது உணருகிறேனோ அப்போது பதவியை ராஜினாமா செய்வேன். அதுவரை என்னுடைய பணிகள் தொடர்ந்து நடைபெறும்'' என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
தனது அமைச்சரவையில் இருந்த நிதியமைச்சர் ரிஷி சுனக், சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவெத் இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் இன்று பார்லிமெண்டில் பேசிய போரிஸ் ஜான்சன், ''என்னுடைய தலைமை மீது நம்பிக்கை இல்லாமல் இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து இருக்கின்றனர். இக்கட்டான சூழலில் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசு பொறுப்பில் இருந்து பின் வாங்கக் கூடாது. மக்கள் எங்களை தேர்வு செய்து உள்ளனர். அந்தக் கடமையில் இருந்து நாங்கள் தவற மாட்டோம். எனது கட்சியில் அல்லது மற்ற எந்தக் கட்சியிலும் அதிகார துஷ்பிரயோகம் செய்வதை நான் விரும்பவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.
SriLanka's crisis : இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு! - கட்டுக்கடங்காத கூட்டும்! மக்கள் தவிப்பு!
முன்னதாக ரிஷி சுனக் மனைவி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷிதா தான் இவரது மனைவி. அக்ஷிதா இங்கிலாந்து சென்ற பின்னரும், அந்த நாட்டின் குடியுரிமையைப் பெறவில்லை. இந்திய குடியுரிமை மட்டுமே வைத்து இருந்தார். இந்திய குடியுரிமை வைத்திருப்பவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டு வருமானத்தின் மீது வரி செலுத்த வேண்டியதில்லை.
அமெரிக்கா: சுதந்திர தினத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது
இந்த வகையில் ரிஷி சுனக் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு உடனடியாக பார்லிமெண்டில் ரிஷி சுனக் பதில் அளித்தார். இங்கிலாந்தில் பெறப்படும் வருமானத்துக்கு தனது மனைவி வரி செலுத்துகிறார் என்று விளக்கம் அளித்து இருந்தார்.
தொடர்ச்சியாக சட்ட வரம்பை மீறி பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது அலுவலகத்தில் பிறந்த நாளை கொண்டாடினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. கொரோனா காலத்தில் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை பறக்கவிட்டு, பிறந்த நாள் கொண்டாடிய போரிஸ் மீது கட்சி எம்பிகளே குற்றம்சாட்டினர்.
இதைத்தொடர்ந்து போரிஸ் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கடந்த மாதம் கட்சி உறுப்பினர்களே கொண்டு வந்தனர். இந்த வாக்கெடுப்பில் 211 பேரின் ஆதரவைப் பெற்று பிரதமாராக தொடர்ந்தார்.
இதையடுத்து, கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த துணை கொறடாவாக செயல்பட்டு வந்த எம்பி கிரிஸ் பின்ஷர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து நடந்த இரண்டு பார்லிமென்ட் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் தான் நேற்று இரண்டு அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். இவர்களுக்கு பதிலாக இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சி போர்க்கொடி
தற்போது எதிர்க்கட்சிகள் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஏற்கனவே நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்து தப்பி இருக்கும் போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். வரும் ஜூலை 21 ஆம் தேதிக்குள் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே இங்கிலாந்தில் நடந்த கருத்துக் கணிப்பில் 66 சதவீத மக்கள் போரிஸ் ஆட்சியை விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ராணியின் பங்கு என்ன?
இந்த சூழலில்தான் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. இவர் ராஜினாமா செய்தாலும் அடுத்த பிரதமரை கட்சி பரிந்துரை செய்யும் வரை இவரே நீடிப்பார். பரிந்துரை செய்யப்பட்ட பிரதமரை ராணி இரண்டாம் எலிசபெத் தேர்வு செய்து அதிகாரபூர்வமாக அறிவிப்பார். இதுதான் கடந்த காலங்களிலும் நடந்தது. தெரசா மே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தபோதும் இந்த நடைமுறை தான் பின்பற்றப்பட்டது. அவசர நிலை கருதி, லண்டனுக்கு வெளியே தங்கி இருக்கும் ராணி இரண்டாம் எலிசபெத் தற்போது லண்டன் திரும்புவதாக செய்தி வெளியாகியுள்ளது.