அமெரிக்காவை புரட்டிப்போட்ட பாம் சூறாவளி.. பொதுமக்களை மிரட்டும் கடுங்குளிர்! என்ன தான் நடக்கிறது ?

By Raghupati R  |  First Published Dec 26, 2022, 9:19 PM IST

அமெரிக்காவில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு பயங்கரமான பனி பொழிவு. பயங்கரமான குளிர், கடுமையான காற்று பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.


பயங்கரமான பனி பொழிவு காரணமாக அமெரிக்க மக்கள் கிறிஸ்துமஸ் விழாவையும் சிறப்பாக கொண்டாட முடியவில்லை. எங்கிருந்து பனிக் காற்று வீசுகிறது என்று தெரியாமல் மக்கள் வீட்டுக்குள் அடைக்கலமாகி உள்ளனர்.  நேற்று கிறிஸ்துமஸ் தினத்திலும் மக்கள் வெளியே வர முடியவில்லை. முக்கியமாக அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மேற்கில் மக்கள் மிகவும்   பாதிக்கப்பட்டுள்ளனர். அவசரகால மீட்பு அமைப்புகள் இந்த இடங்களை சென்று அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாம் சூறாவளி:

Latest Videos

undefined

இதுவரை கடுமையான பனிப்புயலுக்கு 32 பேர் பலியாகி இருக்கின்றனர். மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எங்கிருந்து இவ்வளவு குளிர் காற்று விடுகிறது, இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இந்த கடும் குளிரும், பனிப் பொழிவும் நிலவும் என்று தெரியாமல் மக்கள் சோர்ந்துள்ளனர். ஆர்க்டிக் பகுதியில் இருந்து குளிர்ந்த காற்று நகர்ந்து வெப்பத்தை முழுவதும் தணித்துவிடுகிறது. அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகள் சராசரிக்கும் குறைவான வெப்பநிலையில் காணப்படும் என்று  தேசிய வானிலை சேவை மையங்கள் அறிவித்துள்ளன.

இதையும் படிங்க.. Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு யாருக்கு, எப்போது கிடைக்கும் ? டோக்கன் வாங்குவது எப்படி ? முழு தகவல்கள்!

பொதுமக்கள் பாதிப்பு:

ஒரு சில மணிநேரங்களில் வெப்பநிலை 20 டிகிரி ஃபாரன்ஹீட் (11 டிகிரி செல்சியஸ்) குறையக்கூடும் என்று தேசிய வானிலை சேவை கணித்துள்ளது. பலரின் வீடுகளும் பனியால் மூடப்பட்டு, உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இரண்டும் லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். வீட்டியில் ஹீட்டரும் போட்டுக் கொள்ள முடியாத நிலையில் உறைந்துள்ளனர். தொழிற்சாலைகளும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

வானிலை மையம் எச்சரிக்கை:

காற்றின் குளிர்ச்சி பூஜ்ஜியத்திற்கும் மிகக் கீழே ஆபத்தான நிலையில் குறையக்கூடும். இந்த மாதிரியான வெப்பநிலை நிமிட நேரங்களில் உறைபனியை உண்டாக்க்கும் என்று வானிலை ஆய்வு மைய  நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  சமவெளிப் பகுதிகளில், காற்றின் குளிர் மைனஸ் 70 டிகிரி பாரன்ஹீட் (மைனஸ் 57 செல்சியஸ்) வரை குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய வானிலையின்படி, சமவெளிகள் மற்றும் பெரிய ஏரிப் பகுதிகளில் வசிப்பவர்கள் பனிப்புயலால் தாக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா:

நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தீவிர பனிப்பொழிவை காண்பார்கள் என்று அட்லாண்டா பகுதியில் உள்ள தனியார் வானிலை ஆய்வாளர் ரியான் மாவ் கதெரிவித்துள்ளார். மேற்குக் கடற்கரையின் பெரும்பகுதி குளிரிலிருந்து பாதுகாக்கப்பட்டாலும், புளோரிடா வழியாக ஆர்க்டிக் பகுதியில் இருந்து செல்லும் காற்றால் கிழக்கு, மேற்கு பகுதிகள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான பனிப்பொழிவு மற்றும் கடுமையான காற்று விமானப் போக்குவரத்துக்கும் தடையாக இருக்கிறது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை:

விடுமுறை நாட்கள் என்பதால் யாரும் அதிகமாக தெருக்களுக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.  இந்த வானிலை மாற்றம் மேலும் சில மாற்றங்களை கொண்டு வரலாம் என்று கூறப்படுகிறது. குளிர் நீண்ட நாட்கள் நீடிக்காது. இன்னும் ஒரு வார காலத்தில் வெப்பநிலை சீரடையும் என்று கணித்துள்ளனர். மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகரும் காற்றால் வெப்பநிலையில் மாறுபாடு ஏற்படலாம். 

என்ன காரணம்?:

வடக்கில் இருந்து வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆர்க்டிக் பகுதியில் உறைந்து இருக்கும் பனியில் இருந்து காற்று உருவாகி நகர்ந்துள்ளது. பின்னர் வளி மண்டலத்தின் மத்திய மற்றும் மேலடுக்கு பகுதிக்கு சென்ற குளிர்ந்த காற்று, அங்கிருந்து அமெரிக்காவின் மீது தள்ளப்பட்டுள்ளது. இந்த ஆர்க்டிக் காற்று வெப்பமான, ஈரப்பதமான காற்றுக்கு  முன்னால் தள்ளப்படுவதால், உடனடியாக வானிலை மாற்றம் ஏற்படுகிறது. இதுதான் ''பாம் சூறாவளி" என்று அழைக்கப்படுகிறது.

கடுமையான குளிர்:

இது வேகமாக பனிப்புயலாக மாறுகிறது. இதனால், வளிமண்டல அழுத்தம் 24 மணி நேரத்தில் மிக விரைவாக குறைகிறது. இந்த கடுமையான வானிலை நிகழ்வுகள் பொதுவாக நீர்நிலைகளில் உருவாகின்றன. அவை புயலை உருவாக்கத் தேவையான வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை கொடுக்கின்றன. ஆனால் அதிக அளவு குளிர்ந்த காற்று உருவாவதால்,  பனிப் புயலும் உருவாகிறது.

இதையும் படிங்க.. DMK Vs BJP : 'தம்பி மல! பில்லு இன்னும் வரல'.. அண்ணாமலையை வம்புக்கு இழுத்த திமுகவினர் - வைரல் போஸ்டர்!

click me!