நேபாளத்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள பிரசண்டாவுக்கு டியூபா வாழ்த்து தெரிவித்தார்.
நேபாள நாடாளுமன்றத்துக்கு, கடந்த மாதம் 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 275 உறுப்பினர்களைக்கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைப்பதற்கு 13 இடங்கள் தேவை.
பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை எந்தக் கட்சியும் பெறவில்லை என்பதால், நேபாளத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர் இழுபறி நீடித்து வந்தது. நேபாள காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்பட 5 கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்திருந்தன. இதில் பிரதமர் மற்றும் அதிபர் பதவியை கேட்டு நேபாள காங்கிரஸ் பிடிவாதம் பிடித்தது.
இதையும் படிங்க.. DMK Vs BJP : 'தம்பி மல! பில்லு இன்னும் வரல'.. அண்ணாமலையை வம்புக்கு இழுத்த திமுகவினர் - வைரல் போஸ்டர்!
ஆனால் இதற்கு ஒத்துழைக்காத சிபிஎன் மாவோயிஸ்ட் சென்டர் தலைவர் புஷ்ப கமல் தகால் என்ற பிரசந்தா கூட்டணியில் இருந்து வெளியேறினார். முன்னாள் பிரதமர் கேபி சர்மா ஒலியின் சிபின்-யுஎம்எல் கட்சி மற்றும் பிற சிறிய கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தி புதிய அரசை அமைப்பதற்கான முயற்சிகளை பிரசந்தா முன்னெடுத்தார்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில், பிரசந்தா தலைமையில் புதிய அரசை அமைப்பதற்கான சட்ட ஆவணத்தில் கூட்டணி கட்சியின் எம்.பி.க்கள் 165 பேரும் கையெழுத்திட்டனர்.அதிபர் பித்யாதேவி பண்டாரியிடம் இந்த கடிதத்தை சமர்ப்பித்த பிரசந்தா, ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக்கொண்ட அதிபரும், நாட்டின் புதிய பிரதமராக பிரசந்தாவை நியமித்தார்.
Warmest congratulations on being elected as the Prime Minister of Nepal. The unique relationship between India & Nepal is based on deep cultural connect & warm people-to-people ties. I look forward to working together with you to further strengthen this friendship.
— Narendra Modi (@narendramodi)நேபாள பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புஷ்ப கமல் தகால் பிரசந்தாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிதாக பொறுப்பேற்றுள்ள புஷ்ப கமல் தகால் பிரசந்தாவிற்கு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க.. Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு யாருக்கு, எப்போது கிடைக்கும் ? டோக்கன் வாங்குவது எப்படி ? முழு தகவல்கள்!