China Taiwan War: தைவானுக்கு மீண்டும் ‘டார்ச்சர்’ கொடுக்கும் சீனா: 43 போர் விமானங்களை அனுப்பி பயிற்சி

By Pothy Raj  |  First Published Dec 26, 2022, 1:05 PM IST

தைவானை மிரட்டும் தொணியில் கடந்த 24 மணிநேரத்தில் 43 போர் விமானங்களை அனுப்பி சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டது என்று தைவான் குற்றம் சாட்டுகிறது


தைவானை மிரட்டும் தொணியில் கடந்த 24 மணிநேரத்தில் 43 போர் விமானங்களை அனுப்பி சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டது என்று தைவான் குற்றம் சாட்டுகிறது

சீனா தனக்குச் சொந்தமானதாகக் கூறும் தைவானுக்கு அருகே இருக்கும் சிறிய தீவில் இந்த போர்ப்பயிற்சியை சீன ராணுவம் நிகழ்த்தியுள்ளது.

Latest Videos

undefined

தைவான் நாடு சீனாவின் ஒருபகுதியாக இருந்தாலும், சீனாவில் மாவோவின் புரட்சிக்குப்பின் தைவான் சீனாவில் இருந்து பிரிந்து தனிநாடாக பிரகடனம் செய்தது. இருப்பினும் தைவானை தங்கள் நாடு என்றே சீனா கூறி வருகிறது. 

தைவானுக்கு எந்த வெளிநாட்டு அதிபரும் செல்வதையும், உள்விவகாரங்களில் தலையிடுவதையும் சீனா விரும்பவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் பெலூசி தைவானுக்குச் சென்றதை சீனா கடுமையாக எதிர்த்து, கண்டனம் தெரிவித்தது.

எலான் மஸ்க் பதவிக்கு வரும் தமிழர்.. யார் இந்த சிவா அய்யாதுரை.? வியக்கவைக்கும் வரலாறு!

நான்சி பெலூசி தைவானைவிட்டு சென்றபின், தைவான் நாட்டை அச்சுறுத்தும் வகையில் அதன் வான் எல்லைப் பகுதி மற்றும் சிறிய தீவுப்பகுதியில் போர் பயிற்சி, போர் ஒத்திகையை சீனா நிகழ்த்தி அச்சுறுத்தியது.

இந்நிலையில் தைவானின் கடன்பகுதியைச் சுற்றி கடந்த 24 மணிநேரத்தலி் 43 போர் விமானங்களை அனுப்பி சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. 

தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில் “ தைவான் சீனாவின் ஒருபகுதி அல்ல. எங்களுக்கென இறையாண்மை இருக்கிறது, ஆனால் தைவானுக்கு அருகே தொடர்ந்து சீன ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டு பிராந்திய அமைதியைக் குலைக்கிறது, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. தைவான் கடற்பகுதியை சீன போர்விமானங்கள் கடந்து சென்றன. இது தவிர தைவான் கடற்பகுதி அருகே சீனாவின் 7 கப்பற்படை கப்பல்கள் வந்துள்ளன. 

கையைப் பிசையும் சீனா! இந்த ஒரு நகரில் மட்டும் தினசரி 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

இதையடுத்து, தைவான் சார்பில் பிரத்தேயக போர்விமானம் அனுப்பப்பட்டு, சீன ராணுவத்துக்கு எச்சரி்க்கை விடுக்கப்பட்டது. சீனாவின் ஏவுகணை திட்டம், போர்விமானங்கள் வருகையையும் தைவான் கண்காணித்து வருகிறது. எங்களுக்கு இப்போது அமைதி தேவை, சீனா தாக்குதல் நடத்தனால் எங்கள் பாதுகாப்புக்காக பதிலடி கொடுப்போம்”எனத் தெரிவித்துள்ளது

click me!