தாக்குதலுக்கு வாய்ப்பு… மேரியட் ஹோட்டலுக்குச் செல்லத் தடை… ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க தூதரகம்!!

By Narendran S  |  First Published Dec 25, 2022, 11:57 PM IST

தாக்குதலுக்கான சாத்தியங்கள் இருப்பதால் மேரியட் ஹோட்டலுக்குச் செல்லத் தடை விதித்து அந்நாட்டு அரசு ஊழியர்களுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தாக்குதலுக்கான சாத்தியங்கள் இருப்பதால் மேரியட் ஹோட்டலுக்குச் செல்லத் தடை விதித்து அந்நாட்டு அரசு ஊழியர்களுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தலைநகரில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டதோடு ஆறு பேர் காயமடைந்த நிலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த பாதுகாப்பு எச்சரிக்கை வந்துள்ளது. இதுக்குறித்த பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு எச்சரிக்கையில், தாக்குதலுக்கான சாத்தியங்கள் உள்ளது. 

இதையும் படிங்க: கொரோனா பாதிப்பின் உச்சத்தில் சீனா… வெளியே செல்ல புது டெக்னிக் கண்டுப்பிடித்த தம்பதி… வீடியோ வைரல்!!

Latest Videos

undefined

விடுமுறை நாட்களில் இஸ்லாமாபாத்தில் உள்ள மேரியட் ஹோட்டலில் அமெரிக்கர்களைத் தாக்க அறியப்படாத நபர்கள் சதித்திட்டம் தீட்டுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து அமெரிக்க ஊழியர்களும் இஸ்லாமாபாத்தின் மேரியட் ஹோட்டலுக்குச் செல்லத் தடை விதிக்கப்படுகிறது. அனைத்து பொதுக் கூட்டங்களுக்கும் தடை விதிக்கும் அதே வேளையில், இஸ்லாமாபாத் சிவப்பு எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எலான் மஸ்க் பதவிக்கு வரும் தமிழர்.. யார் இந்த சிவா அய்யாதுரை.? வியக்கவைக்கும் வரலாறு!

இதனால் விடுமுறை காலம் முழுவதும் இஸ்லாமாபாத்திற்கு அத்தியாவசியமற்ற, அதிகாரப்பூர்வமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு தூதரகம் அனைத்து பணியாளர்களையும் வலியுறுத்துகிறது. குறிப்பாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை அடுத்து அனைத்து வகையான மூலைக்கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் சபைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. இரண்டு வாரங்களுக்கு அமலில் இருக்கும் என்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!