சீனாவில் உள்ள ஷாங்காய் நகருக்கு அருகே இருக்கும் ஹெஜியாங் நகரில் மட்டும் தினசரி 10 லட்சம் பேருக்கு மேல் கொரோனாவில் பாதிக்கப்படுகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீனாவில் உள்ள ஷாங்காய் நகருக்கு அருகே இருக்கும் ஹெஜியாங் நகரில் மட்டும் தினசரி 10 லட்சம் பேருக்கு மேல் கொரோனாவில் பாதிக்கப்படுகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொழில்நகரான ஹெஜியாங்கில் அடுத்த சில நாட்களில் இந்த கொரோனா தொற்று இரு மடங்காககவும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சீனாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியபின், கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. தினசரி லட்சக்கணக்கில் மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள், ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு நடக்கிறது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பாதிப்பின் உச்சத்தில் சீனா… வெளியே செல்ல புது டெக்னிக் கண்டுப்பிடித்த தம்பதி… வீடியோ வைரல்!!
தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் மயானங்களில் உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் உடல்களை உறவினர்கள் வரிசையாக வைத்துக்கொண்டு மயானத்தின் முன் காத்திருக்கும் காட்சிகளும் வெளியாகி மனதை பதபதைக்க வைத்துள்ளன. ஆனால், சீனாவில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை உயிரிழப்பு குறைவு, தொற்று குறைவு என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறித்த அறிக்கையை நிறுத்தவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
கதிகலங்கி நிற்கும் சீனா!கொரோனாவால் ஒரேநாளில் 3.70 கோடி பேருக்கு தொற்று:24 கோடி பேர் பாதிப்பு?
ஏனென்றால், தேசிய அளவில் இருந்து வரும் புள்ளிவிவரங்கள் அனைத்தும் முழுமை பெறாமல் இருப்பதால், தினசரி கோவிட் பாதிப்புகள் குறித்த புள்ளிவிவர அறிக்கை வெளியிடுவதை நிறுத்த தேசிய சுகதார ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே ஷாங்காய் நகருக்கு அருகே இருக்கும் தொழில்நகரான ஹெஜியாங் நகரில் தினசரி 10 லட்சம் பேருக்கு குறைவில்லாமல் கொரோனாவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த பாதிப்பு அடுத்த சில நாட்களில் இரு மடங்காகவும் உயரும் எனஹெஜியாங் அரசு தெரிவித்துள்ளது
ஹெஜியாங்கில் மொத்தம் 6.54 கோடி மக்கள் வசிக்கிறார்கள். சீனாவில் நடக்கும் உயிரிழப்புகளுக்கு கோவிட் காரணம் என்று நேரடியாக பதில் அளிக்காமல் நிமோனியா,சுவாசக் கோளாறு போன்றவற்றால் உயிரிழக்கிறார்கள் என அரசு தெரிவிப்பது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவில் தினசரி எத்தனை பேர் கொரோனாவில் பாதிக்கப்படுகிறார்கள், எத்தனை பேர் உயிரிழக்கிறார்கள், அங்குள்ள நிலவரம் என்ன என்பது தெரியாமல் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
கேபிடல் எகானமிக்ஸ் எனும் ஆய்வு நிறுவனம் கூறுகையில் “ சீனா மிகமிக ஆபத்தான வாரங்களுக்குள் செல்ல இருக்கிறது. கொரோனோ பரவலைக் குறைக்க அதிகாரிகள் தரப்பிலும், அரசு தரப்பிலும் கடும் முயற்சிகளை எடுக்கவில்லை. சீனாவில் கொரோனா பாதிப்பு இல்லாத அனைத்து பகுதிகளிலும் விரைவில் கொரோனா தாக்கம் நீளும்”எனத் தெரிவித்துள்ளது
குயிங்டோ, டாங்குவான் நகரங்களில் தினசரி 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் பாதிக்கப்படுகிறார்கள். சீனாவில் தினசரி கட்டுக்கடங்காமல் செல்லும் கொரோனா பாதிப்பால் அந்நாட்டின் சுகாதாரத்துறை கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. ஏராளமான செவிலியர்களும் கொரோனாவில் சிக்கியுள்ளதால், ஓய்வு பெற்ற செவிலியர்களை பணிக்கு திரும்ப அரசு அழைத்து கிராமங்களில் பணியாற்றக் கூறியுள்ளது.
சீனாவில் லூனார் புத்தாண்டு பிறக்க இருப்பதால், வெளியூர், வெளிநாடுகளில்இருக்கும் மக்கள் தாயகம் திரும்புவார்கள். அப்போது கொரோனா தாக்கம், பரவல் இன்னும் வேகெடுக்கும். ஆதலால், அடுத்துவரும் சில வாரங்களில் சீனாவின் நிலைமை மோசமாக இருக்கும் என அறிவியல் வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்