#UnmaskingChina: இந்திய பெருங்கடலில் அமெரிக்க போர் கப்பல்..!! பயங்கர அதிர்ச்சியில் சீனா, பாகிஸ்தான்..!!

By Ezhilarasan Babu  |  First Published Jul 20, 2020, 5:56 PM IST

இந்நிலையில் தெற்காசியாவில் சீனாவின்  நடவடிக்கைகளை எச்சரிக்கும் வகையில், இந்திய கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சி மேற்கொள்ள, நிமிட்ஸ் இந்திய பெருங்கடல் வந்துள்ளது, 


இந்தியா-சீனா இடையே எல்லையில் மோதல் நீடித்து வரும் நிலையில், சீனாவுக்கு வலுவான எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், அமெரிக்கா-இந்தியா இடையேயான  ஒற்றுமையை உலகிற்கு பறைசாற்றும் வகையிலும் உலகின் மிகப்பெரிய போர்க்கப்பல்களில் ஒன்றான அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் இந்தியப் பெருங்கடலுக்கு வருகை தந்துள்ளது. இது இந்திய கடற்படையுடன் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்திய போர்க்கப்பல்களுடன் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபடும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் மற்றும் யூ.எஸ்.எஸ் ரொனால்ட் ரீகன் ஆகிய இரண்டு கப்பல்களிலும் சேர்த்து சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆதே போல் இரண்டு விமான கேரியர்களிலும் 120க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த கப்பல்  கடந்த சனிக்கிழமை மலாக்கா நீரிணை வழியாக இந்திய பெருங்கடலை அடைந்துள்ளது. 

Tap to resize

Latest Videos

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நீடித்து வந்த நிலையில் பேச்சுவார்த்தைகளின் மூலம் தற்போது அது தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. ஆனாலும் இதுவரை அதற்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை. அதே நேரத்தில் எல்லை விவகாரத்தில் இனி சீனா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்தியா எல்லா வகையிலும் தயாராகி வருகிறது. அதேபோல் தென்சீனக் கடலில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், அங்கு சீனாவை எச்சரிக்கும் வகையில் அமெரிக்கா தனது போர் கப்பல்களை நிலை நிறுத்தி, சீனாவை எச்சரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்புகூட தென் சீனக் கடலில் யு.எஸ்.எஸ் நிமிட்ஸ், யூ.எஸ்.எஸ் ரொனால்ட் ரீகன் கப்பல்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டன. இந்நிலையில் தனது நட்பு நாடான இந்தியாவுக்கு ஆதரவாக சீனாவின் அத்துமீறல்களை எச்சரிக்கும் வகையில் உலகிலேயே மிகப்பெரிய போர்க்கப்பலாக கருதப்படும் யூ.எஸ்.எஸ் நிமிட்ஸ் யூ.எஸ்.எஸ் ரீகன் ஆகிய இரண்டு விமானம் தாங்கி கப்பல்களை அமெரிக்கா தெற்காசிய நாடுகளின் பாதுகாப்பிற்காக ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ரோந்து பணியில் ஈடுபடுத்தியுள்ளது. 

இந்நிலையில் தெற்காசியாவில் சீனாவின்  நடவடிக்கைகளை எச்சரிக்கும் வகையில், இந்திய கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சி மேற்கொள்ள, நிமிட்ஸ் இந்திய பெருங்கடல் வந்துள்ளது, அதில் ஏராளமான போர்க் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் இடம்பெற்றுள்ளன. அந்தமான் மற்றும் நிகோபார் கட்டளை மற்றும் கிழக்கு கடற்படை கட்டளை ஆகிய இரண்டிலிருந்தும் கடற்படை கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளன. தென்சீனக்கடல் விவகாரத்தில் அமெரிக்காவுக்காவுக்கு ஆதரவாக இந்தியா கருத்து தெரிவித்திருந்த நிலையில், இந்த போர் ஒத்திகை நடைபெற உள்ளது. தென்சீனக்கடல் விவகாரம் குறித்து  கடந்த வாரம் கருத்து தெரிவித்த வெளி விவகாரத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, தென்சீனக்கடல் உலகளாவிய பொது நலன்களில் ஒரு பகுதியாகும்,  அப்பிராந்தியத்தில்  அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதில் இந்தியாவுக்கு எப்போதும் ஆர்வம் உண்டு என கூறியிருந்தார். அதேபோல் தென்சீனக்கடல் விவகாரத்தில் சீனாவால் எதிர்க்கப்படும் நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா துணை நிற்கும் என அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பாம்பியோ உறுதியளித்துள்ளார். இந்நிலையில் இந்தியா- அமெரிக்கா இணைந்து போர் பயிற்ச்சி மேற்கொள்ள உள்ளன. இது சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு மிகுந்த கலக்கத்தையும் அதிர்ச்சியையுப் ஏற்படுத்தியுள்ளது.  
 

click me!