சீனாவை அடித்து துவம்சம் செய்யாமல் விடாதுபோல அமெரிக்கா..!! தென்சீன கடலில் மீண்டும் அமெரிக்கா போர் ஒத்திகை..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 18, 2020, 7:56 PM IST
Highlights

மீண்டும் அதன் வீரர்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவது சீனாவுக்கு அதிர்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

அமெரிக்கா-சீனா இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் நீடித்து வரும் நிலையில், தென் சீனக் கடலில் அமெரிக்கா மீண்டும் ராணுவ போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இது ஒரு மாதத்திற்குள் நடத்தப்படும்  இரண்டாவது கடற்பயிற்சியாகும். இம்மாதத் தொடக்கம் முதல் யூ.எஸ்.எஸ் ரொனால்ட் மற்றும் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் என்ற  இரண்டு  போர் விமானங்களும்  தென் சீன கடற்பகுதியின் மையத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா இந்தப் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. கொரோனா விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையே ஏற்பட்ட மோதல், ஹாங்காங், தைவான் உள்ளிட்ட நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக அமெரிக்காவின் தலையீடு  போன்ற பல்வேறு காரணங்களால் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்குநாள் பூதாகரமாகி வருகிறது. இந்நிலையில் தென் சீனக் கடலில் உள்ள பல்வேறு  தீவுகளை சீனா தனக்கே சொந்தமென உரிமை கொண்டாடி வரும் நிலையில், ஜப்பான், வியட்நாம், தென் கொரியா, புருனே, மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், உள்ளிட்ட நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் நிலவுகிறது. 

இந்நிலையில்  சீனாவுடன் மோதலில் ஈடுபட்டு வரும் நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தென் சீன கடல் பகுதியில் யு.எஸ்.எஸ் நிமிட்ஸ், யூ.எஸ்.எஸ்  ரொனால்ட் ரீகன் ஆகிய இரண்டு விமானம் தாங்கி கப்பல்களை  நிறுத்தி சீனாவை எச்சரித்து வருகிறது. அணு ஆயுத ஏவுகணைகளுடன் கூடிய விமானங்களை தாங்கியுள்ள இந்த கப்பல்களால் தென் சீன கடலில் பதற்றம் அதிகரித்துள்ளது. சீனாவும்-அமெரிக்க போர் கப்பல்களுக்கு எதிராக தனது பலம் பொருந்திய அணு ஆயுத போர் கப்பல்களை தயார் நிலையில் வைத்துள்ளது. இதனால் பதற்றம் உச்சத்தை அடைந்துள்ளது. எனவே அமெரிக்கா சீனாவின் இந்த நடவடிக்கைக்கு சவால் விடுக்கும் வகையில் இந்த போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.  ஜூலை-4 ஆம் தேதி இந்தப் போர் கப்பல்கள் போர் பயிற்சியில் ஈடுபட்ட நிலையில்  தற்போது  மீண்டும் அதன் வீரர்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவது சீனாவுக்கு அதிர்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் போர்க் கப்பல்களில் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படை வீரர்கள் ராணுவ உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். 

இரண்டு விமான கேரியர்களிலும் 120க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன. இது குறித்து தெரிவித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சகம், அமெரிக்கா வேண்டுமென்றே போர்க்கப்பல்களை தென் சீன கடலில் நிலை நிறுத்தியிருக்கிறது. இது தென்சீனக் கடல் பிராந்தியத்தில்  அமைதியை சீர்குலைக்கும் சதியாகும், தென் சீன கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மத்தியில்  அமெரிக்கா வன்முறையை விதைக்கிறது. ஆனால் தென்சீனக் கடல் பகுதியில் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் சீனா உறுதியாக உள்ளது. சீனாவுக்கு எதிராக இக்கடற்பிராந்தியத்தில் உள்ள நாடுகளை தூண்டும் வேலையை அமெரிக்கா இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் சீனா எச்சரித்துள்ளது. ஆனால், சீனாவின் குற்றச்சாட்டை புறந்தள்ளியுள்ள அமெரிக்கா, தென்சீனக் கடல் பிராந்தியத்தில் சீனாவின் நடவடிக்கைகள் சட்டத்திற்குப் புறம்பானவை,  தென் சீன கடல் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு  போக்கை இனியும் உலகநாடுகள் அனுமதிக்காது. 

சீனா இந்த பிராந்தியத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்துவதற்காக அங்கு செயற்கை தீவுகளை உருவாக்கியதுடன் அதை ராணுவ தளங்களாக மாற்றியுள்ளது. சீனா, தென்சீனக்கடற் பகுதியை  ராணுவமயமாக்கி வருவது சர்வதேச நாடுகளை அச்சுறுத்துவதாக உள்ளது.எனவே தென்சீனக் கடல் பிராந்தியத்தில், சீனாவை எதிர்த்துப் போராடும் நாடுகளுக்கு  அமெரிக்கா உறுதுணையாக நிற்கும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்கா தென் சீனக் கடலில் இரண்டாவது முறையாக போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருவது சீனாவுக்கு மிகுந்த கலக்கத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

click me!