பிரபல செய்தி வாசிப்பாளர் ஒருவர் லைவில் செய்தி வாசித்துக்கொண்டிருந்தபோது அவருடைய பல் கீழே விழுந்த சம்பவம் பார்பவர்களையே அதிர்ச்சியடைய செய்தது. இருப்பினும் அந்த செய்தியாளர் சாமர்த்தியமாக அதை சமாளித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உக்ரைன் நாட்டை சேர்ந்த பிரபல செய்தி வாசிப்பாளர் மரிச்கா படால்கோ. 20 வருட செய்தி துறையில் அனுபவம் மிக்க இவருக்கு இது மிகப்பெரிய நெருக்கடியான சூழ்நிலையாக இருந்தாலும், இதனை மிகவும் தைரியமாக அவர் சமாளித்த விதம் பலரது பாராட்டுகளையும் இவருக்கு பெற்று தந்துள்ளது.
மரிச்கா எப்போதும் போல் நேற்று நேரலையில் செய்தியை தொகுத்து அளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது முன்பல் உடைந்து கீழே விழுந்தது. இந்த சமயத்தில் தன்னுடைய முகத்தில், எந்த ஒரு அச்சம், பதட்டம் போன்றவற்றை வெளிப்படுத்தாமல், சாமர்த்தியமாக அந்த பல்லை கையில் எடுத்து வைத்து கொண்டு மீண்டும் செய்திகளை தொகுத்து வழங்கினார்.
நேரலை செய்தி வாசிப்பு முடிந்ததும் இதுகுறித்து மரிச்கா தெரிவித்ததாவது, கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கடிகாரத்தால் தன் மகள் தாக்கிய போது, இந்த பல் சேதமடைந்தது. ஆனால் சற்றும் எதிர்பாராமல் செய்தி வாசிக்கும் போது இந்த பல் விழும் என நான் கனவில் கூட நினைத்தது இல்லை என ஆச்சர்யமாக இந்த நிகழ்வுகுறித்து பேசியுள்ளார்.
இவரின் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
A post shared by Марічка Падалко (@marichkapadalko) on Jul 15, 2020 at 8:00am PDT