நிச்சயம் ஒரு நாள் இயல்பு நிலைக்கு திரும்புவோம்..!! அமெரிக்க சுகாதாரத்துறை நிபுணர் அதிரடி..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 18, 2020, 2:25 PM IST
Highlights

தற்போதைய நிலையிலிருந்து, நிச்சயம் ஒருநாள் அமெரிக்கா இயல்பு நிலைக்கு திரும்பும் எனக் கூறியுள்ளார்.

தற்போதுள்ள கொரோனா நெருக்கடியிலிருந்து ஒருநாள் நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் என அமெரிக்க நோய்த்தொற்று தடுப்பு மற்றும் சுகாதாரத்துறை நிபுணர் டாக்டர்  அந்தோணி பௌசி தெரிவித்துள்ளார். இத்தனை நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் அதிருப்தியையும்,அவநம்பிக்கையையும் வெளிப்படுத்தி வந்த  பௌசி முதல் முறையாக நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை உதிர்த்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் 1 கோடியே 41 லட்சத்து 95 ஆயிரத்து 397 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 லட்சத்து 99 ஆயிரத்து 451 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 84 லட்சத்து 71 ஆயிரத்து 259 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. சுமார் 150க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் அதில் எந்த பலனும் இல்லை. 

ஆனாலும் இந்த வைரஸ் தொற்றின் எண்ணிக்கை மேலும் பன்மடங்கு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. உலக அளவில் வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, பெரு, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் முதல் 6 இடங்களைப் பெற்றுள்ளன. இதில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு கொரோனா வைரஸால் அமெரிக்காவே மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  இதுவரை அந்நாட்டில்  37 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் இதன் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்கா சுகாதாரத்துறை நிபுணரும் மற்றும் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை குழுவின் முக்கிய உறுப்பினருமான அந்தோணி பௌசி, தற்போதைய நிலையிலிருந்து, நிச்சயம் ஒருநாள் அமெரிக்கா இயல்பு நிலைக்கு திரும்பும் எனக் கூறியுள்ளார். 

அமெரிக்காவில் 1.41 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர், உலகில் இதுவரை 140 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்நிலையில் அறிவியல் மற்றும் சுகாதார முக்கியத்துவத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் தொற்று நோயை ஒழிக்க முடியும், உலகளவில் அமெரிக்காவிலேயே அதிகபட்ச நோயாளிகள் பதிவாகியுள்ளனர். அதில் 16. 82 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். மொத்தத்தில் கடந்த ஐந்து, ஆறு மாதங்களாக அமெரிக்கா மிக மோசமான கட்டத்தை கடந்து வந்துள்ளது. ஆனால் இவை அனைத்தும் ஒரு நாள் நிச்சயம் முடிவுக்கு வந்துவிடும். இந்த நெருக்கடியிலிருந்து அமெரிக்கா ஒருநாள் இயல்பு நிலைக்கு திரும்பும். இதெல்லாம் ஒரு போதும் மாறப்போவதில்லை என்று சில சமயங்களில் நீங்கள் நினைப்பீர்கள், ஆனால் அறிவியல் மற்றும் சுகாதார குறியீடுகளை கணக்கில் எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த பெருந்தொற்றை நாம் நிச்சயம் சமாளிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

 

click me!