மாலத்தீவில் ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்-கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு கொண்டிஇருந்த 20 தனிநபர்கள் மற்றும் 29 நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
மாலத்தீவில் ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்-கொய்தா பயங்கரவாத குழுக்களின் நடவடிக்கைகளுக்கு நிதி உதவி வழங்கியதற்காக 20 தனிநபர்கள் மற்றும் 29 நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
மாலத்தீவிற்குள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி மற்றும் பிற வகையான ஆதரவைத் தடுப்பது மற்றும் சீர்குலைப்பது இந்த தடையின் நோக்கம் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் திங்கட்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறினார்.
"உள்ளூரிலும் சர்வதேச அளவிலும் இந்த பயங்கரவாத ஆதரவு நெட்வொர்க்குகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அமெரிக்கா உறுதியுடன் உள்ளது, மேலும் தாக்குதல்களை நடத்துவதற்கான நிதி மற்றும் ஆதாரங்களைத் தடுப்பதை உறுதிப்படுத்துகிறது" என்றும் மில்லர் கூறினார்.
தீயில் கருகிய கிடார், தபேலா... இசையால் ஒழுக்கக்கேடு ஏற்படுமாம்! இசைக்கருவிகளைக் கொளுத்தும் தாலிபான்!
பொருளாதாரத் தடை பட்டியலில் ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS, ISIS-Khorasan) பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த 18 பேரும், அல்-கொய்தா செயல்பாட்டாளர்கள் 2 பேரும் உள்ளனர். பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி அளித்த 29 நிறுவனங்களின் பெரும் அதில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் தடைக்கு ஆளாகியுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத குழுவின் முக்கிய ஆட்சேர்ப்பாளராக 2019ஆம் ஆண்டு அமெரிக்காவில் அறிவிக்கப்பட்ட முகமது அமீனுடன் தொடர்டையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நபர்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு எதிரான தாக்குதல்களைத் திட்டமிட்டு செயல்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விண்வெளியில் 20 நிமிடத்திற்கு ஒரு முறை மின்னி மறையும் மர்ம ஒளி! அதிசயிக்கும் விஞ்ஞானிகள்!!