நாட்டின் கொடியை எந்தெந்த வகையில் பயன்படுத்தலாம்.. சிங்கப்பூர் அரசு புது ரூல்ஸ் - மீறினால் தண்டனை உறுதி!

By Ansgar R  |  First Published Jul 31, 2023, 9:55 PM IST

நாளை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 1) முதல் நடைமுறைக்கு வரும் தேசிய சின்னங்கள் சட்டம் மற்றும் விதிமுறைகளின் கீழ், சிங்கப்பூர்க் கொடியை அந்நாட்டு மக்கள் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்படாமல் பாதுகாக்கவும், தேசிய சின்னங்களை மரியாதையுடன் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தவும் இந்த மாற்றங்கள் தேவைப்படுவதாக கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சகம் (MCCY) இன்று திங்களன்று வெளியிட்ட ஒரு ஊடக வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

பண்பாடு, சமூகம் மற்றும் இளைஞர்களுக்கான அமைச்சர், தேசியக் கொடியை தேசிய தின காலமான ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தையும் தாண்டி பறக்கவிட அனுமதி அளித்துள்ளார். மேலும் கொடிக் கம்பம் மற்றும் மின் விளக்குகள் இல்லாமலும் கொடியை பறக்கவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Latest Videos

அதேபோல தேசிய தினத்தின் போது தேசியக் கொடியையோ அல்லது அதன் படத்தையோ வணிக அல்லது அலங்கார நோக்கங்களுக்காக பயன்படுத்த விரும்புவோர், இனி அமைச்சரிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.

சிங்கப்பூரின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் விலாசினி! ஒரே ஆண்டில் முடிவுக்கு வந்த அரசியல் வாழ்க்கை..

தேசியக் கொடி மற்றும் அதன் படத்தை மரியாதையுடன் பயன்படுத்தும் வரை, அமைச்சரின் அனுமதியின்றி ஆண்டு முழுவதும் வணிக நோக்கங்களுக்காக அல்லாத ஆடைகளில் தேசிய கோடியை பயன்படுத்தலாம்.
ஆடைகளில் தேசியக் கொடியின் படத்தைப் பயன்படுத்தும்போது, ​​அதை இடுப்புக்கு மேல் இருக்கும் வண்ணம் அமைக்க வேண்டும். உள்ளாடைகள் மற்றும் முககசவம் போன்ற பயன்படுத்த கூடாது.

நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கத்திற்காக உடையில் தேசியக் கொடியின் உருவம் பயன்படுத்தப்பட்டால், அது அந்த ஆடையின் உச்சியில் மட்டுமே இருக்கும் வண்ணம் தயாரிக்க வேண்டும். தேசியக் கொடியின் மாற்றியமைக்கப்பட்ட வடிவமைப்புகளைக் கொண்ட கொடிகளை உற்பத்தி செய்வதும் காட்சிப்படுத்துவதும் தடைசெய்யப்படுகிறது.

மேலும் பிளாஸ்டிக் பேக்கேஜிங், பேப்பர் நாப்கின்கள் மற்றும் குப்பைப் பைகள் போன்ற தூக்கி எறியப்படும் பொருட்களிலும் சிங்கப்பூர்க் கொடி படத்தைப் பயன்படுத்தக் கூடாது. மேசை விரிப்புகள், டோர்மேட்கள் அல்லது கார் டயர்கள் போன்ற தேவையற்ற இடங்களில் பயன்படுத்தக்கூடாது.

நினைவுச்சின்னங்களைப் பாதுகாக்கும் சட்டம் 2009ன் கீழ் தேசியச் சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தேசியக் கொடியை அவமரியாதையாகப் பயன்படுத்துதல் ஆகியவை மிகக் கடுமையான குற்றமாகும். இந்த குற்றத்திற்காக, ஒரு நபருக்கு அதிகபட்சமாக அரை ஆண்டு சிறைத்தண்டனை, S$30,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

விண்வெளியில் 20 நிமிடத்திற்கு ஒரு முறை மின்னி மறையும் மர்ம ஒளி! அதிசயிக்கும் விஞ்ஞானிகள்!!

click me!