ஆஸ்திரேலிய கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்மப் பொருள் குறித்த சந்தேகம் தற்போது தீர்ந்துள்ளது, அந்த மர்ம பொருள் என்ன என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய கடற்கரையில், சில தினங்களுக்கு முன்பு ஒரு மர்ம பொருள் கரை ஒதுங்கியது. இதை கண்ட நெட்டிசன்கள் பலர் இது இந்தியாவில் இருந்து நிலாவுக்கு ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் ஒரு பாகம் என்று சிலர் கூற, இன்னும் சிலர் இது காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகமாக இருக்கலாம் என்று ஆளாளுக்கு ஒரு கருத்தை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கடற்கரையில் ஒதுங்கிய அந்த மர்ம பொருளின் விளக்கம் தற்பொழுது வெளியாகி உள்ளது. அது இந்தியா அனுப்பிய ஒரு ராக்கெட்டின் சிதறிய பாகங்கள் என்று தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளது, இதை இந்திய அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்
undefined
எளிமையாகும் பயணம்.. சென்னை - சிங்கப்பூர் வழித்தடத்தில் புதிய சேவை - ஸ்கூட் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!
செயற்கைக்கோள் ஏவுகணை வாகனத்தின் மூன்றாம் கட்ட வெடிப்பில் உள்ள பொருளாக அது இருக்கலாம் என ஆஸ்திரேலிய விண்வெளி ஆய்வு மையம் முடிவு செய்துள்ளது. பிஎஸ்எல்வி ஏவுகணை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் இயக்கப்பட்டுள்ளதை நாங்கள் அறிவோம் என்று ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுமார் இரண்டு மீட்டர் (ஆறு அடி) உயரமும், பல கேபிள்கள் கொண்ட அந்த பொருள், தற்போது சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது என்றும் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இரு நாடுகளின் அதிகாரிகளும் இணைந்து, "ஐக்கிய நாடுகளின் விண்வெளி ஒப்பந்தங்களின் கீழ் உள்ள கடமைகளை பரிசீலிப்பது உட்பட, அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற விண்வெளி சமந்தமான மர்ம பொருட்கள் கிடைப்பது இது முதல் முறை அல்ல. கடந்த ஆகஸ்ட் மாதம், நியூ சவுத் வேல்ஸ் பகுதியில், செம்மறி ஆடு வளர்ப்பாளர் ஒருவர், எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அனுப்பிய ஒரு ராக்கெட்டின் எஞ்சிய பாகங்களை தனது கொட்டகையின் வாசலில் கண்டெடுத்தார்.