பாகிஸ்தான் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை பழமைவாத கட்சியான ஜமியத் உலமா இஸ்லாம் -பாஸல் கட்சியின் கூட்டத்தில் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு இருந்தனர்.
ஜமியத் உலமா இஸ்லாம்-பாஸல் கட்சியின் கூட்டம் நடந்து கொண்டு இருந்தபோது திடீரென நிகழ்ந்த குண்டு வெடிப்பில் இதுவரை 44 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குண்டுவெடிப்பு குறித்து கைபர் பக்துன்வா மாகாண போலீஸ் கூறுகையில், ''இஸ்லாமிய கட்சியின் கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் தடை செய்யப்பட்டு இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு நடத்தி இருந்த தற்கொலைப் படை தாக்குதலில் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் பகுதியில் ஜமியத் உலமா இஸ்லாம்-பாஸல் கட்சி கூட்டம் நடத்தி இருந்தது. இந்த நிலையில்தான் நேற்று தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தது.
பாகிஸ்தானில் அரசியல் பொதுக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி, 200 பேர் காயம்
போலீஸ் அதிகாரிகள் கூறியதாக வெளியாகி இருக்கும் செய்தியில், ''ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஒரு பிரிவாக செயல்பட்டு வரும் தேஷ் என்ற தடை செய்யப்பட காராணமாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்கொலைப் படை தாக்குதல் குறித்த அனைத்து தகவல்களையும் சேகரித்து வருகிறோம். வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்று தெரிவித்துள்ளனர்.
கைபர் பக்துன்வா மாகாண தலைமை போலீஸ் அதிகாரி கூறுகையில், ''தற்கொலைப் படை தாக்குதலுக்கு 10 கிலோ எடையிலான வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைப்படை பயங்கரவாதிகள் கூட்டத்தின் முதல் வரிசையில் அமர்ந்து கொண்டு இருந்துள்ளனர். கூட்ட மேடை அருகே ஜமியத் உலமா இஸ்லாம்-பாஸல் கட்சியின் மாவட்ட தலைவர் அமிர் மவுலானா அப்துல் ரஷீத் வந்தபோது வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர்'' என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி, இறந்தவர்களின் ஆன்மாக்கள் சாந்திடைய வேண்டும் தெரிவித்து, அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும், அவர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கைபர் கைபர் பக்துன்வா காபந்து முதல்வர் அசம் கான், குண்டுவெடிப்பு குறித்த விரிவான அறிக்கையை போலீசாரிடம் கோரியுள்ளார். பெஷாவரில் உள்ள ஒருங்கிணைந்த ராணுவ மருத்துவமனைக்குச் சென்ற அவர், காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தார்.