உக்ரைன் மீது ரஷியா தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. ரஷிய படைகள் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற மும்முரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
சர்ச்சையை கிளப்பிய ஜோ பைடன் :
போலந்து நாட்டில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உக்ரைனின் லீவ் நகரில் ரஷியா தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகிறது. ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து அந்த நகரின் ஒருசில பகுதிகளில் வெடிவிபத்துகளும் நடைபெற்றுள்ளது.உக்ரைன் நாட்டிற்குத் தொடர்ச்சியாக அதிநவீன ஆயுதங்களை அளித்து உதவி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் சூழலில், அமெரிக்க அதிபர் பைடன் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ளார்.
இதற்கிடையே, உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள அமெரிக்க வீரர்கள், நேட்டோ படையில் உள்ள வீரர்கள் மத்தியில் ஜோ பைடன் பேசினார்.போலந்து வந்துள்ள உக்ரைன் மந்திரிகளுடன் அமெரிக்க அதிபர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில்தான் கூட்டம் ஒன்றில் பைடன் பேசியது பெரிய அளவில் சர்ச்சைக்கு உள்ளாக்கி உள்ளது.
புடின் ஆட்சியில் இருக்கக்கூடாது :
அப்போது பேசிய அவர், ‘நேட்டோவில் சிறிய கல்லை கூட நகர்த்த வேண்டும் என்று ரஷ்யா நினைக்க கூடாது. நேட்டோ படையின் ஒரு பிடி மண்ணை கூட ரஷ்யாவால் பிடிக்க முடியாது. இந்த போரில் ஏற்கனவே ரஷ்யா தோல்வி அடைந்துவிட்டது. திட்டமிடல் ரீதியாக இந்த போர் ரஷ்யாவிற்கு தோல்வியை மட்டுமே கொடுத்துள்ளது. ரஷ்ய மக்கள் எண்களின் எதிரிகள் கிடையாது.
ஆனால் கடவுளே புடின் இனியும் அதிகாரத்தில் இருக்க கூடாது. நாங்கள் உக்ரைன் மக்களுடன் இருக்கிறோம். உக்ரைன் மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம். நேட்டோவை காக்கும் கடமை எங்களுக்கு இருக்கிறது. அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம். இது ரஷியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அழைப்பை பைடன் விடுவிக்கிறாரா என்ற கோணத்தில் விவாத பொருளானது.
பல்டி அடித்த வெள்ளை மாளிகை :
ஜோ பைடன் பேச்சு குறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அளித்துள்ள விளக்கத்தில், ‘ரஷியாவில் ஆட்சி மாற்றத்தை ஜோ பைடன் விரும்பவில்லை.பு டின் மற்ற நாடுகளின் மீது அதிகாரத்தை செலுத்த கூடாது என்று பொருள்படும் வகையில் மட்டுமே அப்படி பேசினார். ஆட்சி மாற்றம் பற்றி பேசவில்லை’ என்று விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.