உக்ரைன் தலைநகர் கீவ்வில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் திங்கள்கிழமை காலை வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என கீவ் மேயர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா தாக்குதல்:
உக்ரைன் தலைநகர் கீவ்வில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் திங்கள்கிழமை காலை வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என கீவ் மேயர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ இராணுவ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதலை தொடங்கியது. உக்ரைனின் முக்கிய நகரங்களில் தொடர்ந்து குண்டு மழைகளை பொழிந்து வருகிறது ரஷ்யா படை. தலைநகர் கீவ், கார்கீவ், மரியுபோல், கெர்சன்,சுமி, லீவ் உள்ளிட்ட நகரிங்களில் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுகிறது.
மக்கள் வெளியேற்றம்:
போர் தாக்குதலால் உக்ரைனின் பெரிய பெரிய கட்டிடங்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை சேதமடைந்து உருகுலைந்துள்ளன. மேலும் உக்ரைன் நாட்டின் பல்வேறு இராணுவ தளங்கள் ரஷ்ய படையினார் தொடர் தாக்குதலில் சிக்கி வருகிறது. பெரும்பாலும் ரஷ்யாவின் பீரங்கி தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன. போர் தாக்குதலில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதுவரை 30 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் போலந்து, ரூமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் தாக்குதல் ஒரு மாதம் தாண்டி தொடர்ந்து வரும் நிலையில், போரில் இதுவரை 136 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு தடை:
ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ரஷ்யாவுடனா வர்த்தக தொடர்பை இதுவரை 400 நிறுவனங்கள் நிறுத்திவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தபோதிலும், உக்ரைனின் மீது இன்னும் ஆக்ரோஷமான தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது.ஹிட்லரின் நாஜிப் படைகளை வீழ்த்தி இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெற்ற நாளை ஆண்டுதோறும் ரஷ்யா மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறது.இதனிடையே இதுவரை திரட்டப்பட்ட தகவல்களின்படி வரும் மே 9-ம் தேதி உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்ற தகவல் தங்களுக்கு தெரிவந்துள்ளதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே
கீவ்வில் ஊரடங்கு- பைடன் சந்திப்பு:
பதற்றமான போர் சூழல் மத்தியில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் 35 மணி நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் திங்கள்கிழமை காலை வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என கீவ் மேயர் தெரிவித்துள்ளார். இந்த ஊரடங்கின் போது, கடைகள், மருந்தகங்கள்,எரிபொருள் எரிப்பு நிலையங்கள் மற்றும் பொது போக்குவரத்து இயங்காது என்று அவர் கூறியுள்ளார். இந்நிலையில் உக்ரைன் அண்டை நாடான போலந்து சென்றுள்ள அமெரிக்க அதிபர் பைடன், உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா மற்றும் பாதுகாப்புதுறை அமைச்சர் ஓலெக்ஸி ரெஸ்னிகோவ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். மேலும் போலந்து நாட்டில் உள்ள அமெரிக்க படையினர் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும் படிக்க: Ukraine Russia War: முடிவுக்கு வருகிறதா போர்..? தேதி குறித்த ரஷ்யா.. புதின் எடுத்த அதிரடி..