உக்ரைன் மீதான படையெடுப்பால் கடும் பொருளாதார தடைகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டு தோறும் மே 9-ம் தேதியை போர் வெற்றி விழாவாக ரஷ்யா கொண்டாடி வரும் நிலையில், தற்போது அதே நாளில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் விளாடிமிர் புதின் திட்டமிட்டுள்ளார்.
ஹிட்லரின் நாஜிப் படைகளை வீழ்த்தி இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெற்ற நாளை ஆண்டுதோறும் ரஷ்யா மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறது.இதனிடையே இதுவரை திரட்டப்பட்ட தகவல்களின்படி வரும் மே 9-ம் தேதி உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்ற தகவல் தங்களுக்கு தெரிவந்துள்ளதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ இராணுவ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதலை தொடங்கியது.உக்ரைனின் முக்கிய நகரங்களில் தொடர்ந்து குண்டு மழைகளை பொழிந்து வருகிறது ரஷ்யா படை. போர் தாக்குதலில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதுவரை 30 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் போலந்து, ரூமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
தலைநகர் கீவ், கார்கீவ், மரியுபோல், கெர்சன்,சுமி, லீவ் உள்ளிட்ட நகரிங்களில் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுகிறது. போர் தாக்குதலால் உக்ரைனின் பெரிய பெரிய கட்டிடங்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை சேதமடைந்து உருகுலைந்துள்ளன. மேலும் உக்ரைன் நாட்டின் பல்வேறு இராணுவ தளங்கள் ரஷ்ய படையினார் தொடர் தாக்குதலில் சிக்கி வருகிறது. பெரும்பாலும் ரஷ்யாவின் பீரங்கி தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ரஷ்யாவுடனா வர்த்தக தொடர்பை இதுவரை 400 நிறுவனங்கள் நிறுத்திவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தபோதிலும், உக்ரைனின் மீது இன்னும் ஆக்ரோஷமான தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது. ரஷ்ய வங்கிகள் சர்வதேச வங்கிகளுடன் பரிவர்த்தனை செய்ய உதவும் ஸ்விட் வங்கி முறைக்கு தடை விதிக்கப்பட்டது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூகஊடக நிறுவனங்கள் செயல்பாட்டை ரஷ்யாவில் நிறுத்தின. அமெரிக்கா, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் தடை விதித்துள்ளது.
தொடரும் போரினால், இரு நாடுகளிலும் பெரும் உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே ஐ.நா மனித உரிமைகள் கணக்கெடுப்படி இதுவரை 2,788 மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் இதில் 1081 பேர் வீரர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை 1707 பேர் காயமடைந்துள்ளனர். போரில் 135 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனுக்கு உதவுவதற்காக ஐரோப்பிய யூனியன் அமைப்பு 3400 கோடி யூரோக்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதனிடையே உக்ரைன் போரில் இதுவரை 136 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசின் தலைமை வழக்கறிஞர் ஜெனரல் தெரிவித்துள்ளார். மேலும் 199 குழந்தைகள் காயமுற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தலைநகர் கீவ்வில் மட்டும் இதுவரை 64 குழந்தைகளும் டொனட்ஸ்க் பகுதியில் 50 குழந்தைகளும் பலியாகியுள்ளனர்.