அமெரிக்காவின் மேற்கு மசாசூசெட்டஸ் நகரில் நேற்று நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள், 5 மாணவர்கள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அமெரிக்காவின் மேற்கு மசாசூசெட்டஸ் நகரில் நேற்று நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள், 5 மாணவர்கள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பிரேம் குமார் ரெட்டி கோடா(வயது27), பவானி குல்லபள்ளி(22), சாய் நரசிம்மா பத்மசேத்தி(22) ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர் என பெர்க்ஸையர் மாவட்ட அரசுவழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மசாசூட்செட்ஸ் மாநில மற்றும் உள்ளூர் போலீஸார் இணைந்து, இரு கார்களும் மோதிக்கொண்ட விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விபத்துக் குறித்து மசாசூட்செட்ஸ் போலீஸார் கூறுகையில் “ நியூ ஹெவன் பல்கலைக்கழம் மற்றும் சாக்ரெட் ஹார்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிலும் 9 மாணவர்கள் ஒரு காரில் சென்றனர். அப்போது, வியாழக்கிழமை காலை 5.30 மணி அளவில் நார்த்பவுண்ட் பகுதியில் மற்றொரு கார் மீது மாணவர்கள் பயணித்த கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பிரேம் குமார் ரெட்டி கோடா(வயது27), பவானி குல்லபள்ளி(22), சாய் நரசிம்மா பத்மசேத்தி(22) ஆகியோர் உயிரிழந்தனர், மனோஜ் ரெட்டி டோன்டா(23), ஸ்ரீதர் ரெட்டி(22), விஜித் ரெட்டி(23), ஹிமா ஐஸ்வர்யா ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் பெர்க்சையர் மருத்துவமனையில் சிக்சைசக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தனர்.
காரின் ஓட்டுநர் அர்மாண்டோ பாடிஸ்டா கிரஸ், பேர்வியூ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது விபத்து தொடர்பாக மாணவர்களின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.