டெஸ்லா கார் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். நிர்வாகத்தை தான் கையில் எடுத்தவுடன் 4 உயர்அதிகாரிகளை பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
டெஸ்லா கார் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். நிர்வாகத்தை தான் கையில் எடுத்தவுடன் 4 உயர்அதிகாரிகளை பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், சட்டஅதிகாரி விஜயா கடே,தலைமை நிதி ஆதிகாரி நெட் செகால் ஆகியோ பதவியிலிருந்து நீக்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
ட்விட்டர் நிறுவனத்தை 44000 கோடி டாலருக்கு வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் முடித்துவிட்டார் என்று தி நியூ யார்க் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
டீடோட்லர்’ரிஷி சுனக்! அறிந்திராத சில ஸ்வரஸ்யத் தகவல்கள்
ட்விட்டர் வட்டாரங்கள் கூறுகையில் “ எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கி நிர்வாகத்தை கையில் எடுத்துவிட்டார், ட்விட்டர் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார், குறைந்தபட்சம் 4 உயர் அதிகாரிகள் நீக்கப்படுகிறார்கள். தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், சட்டஅதிகாரி விஜயா கடே,தலைமை நிதி ஆதிகாரி நெட் செகால், சீன் எட்ஜெட் ஆகியோர் நீக்கப்படுகிறார்கள்”எ னத் தெரிவிக்கின்றன
கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் ட்விட்டர் சிஇஓவாக பராக் அகர்வால் நியமிக்கப்பட்டார். கடந்த 10 ஆண்டுகளாக ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அகர்வால் படிப்படியாக உயர்ந்தார். அகர்வால் ட்விட்டரில் பணியில் சேரும் போது ட்விட்டரில் 1000 ஊழியர்களுக்கும் குறைவாக இருந்தனர்.
இந்தியா, அமெரிக்காவுக்கு எதிராக சைபர் ராணுவம்! பாகிஸ்தானுக்கு துருக்கி ரகசிய உதவி
ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்தது முதல் சிஇஓ பராக் அகர்வாலுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து மோதலில் ஈடுபட்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் நிர்வாகத்தில் விஜயா கடேயின் பங்கு, நிர்வாகச் சீர்திருத்தம் செய்யாமல் இருத்தையும் எலான் மஸ்க் விமர்சித்து வந்தார். ஹைதராபாத்தில் பிறந்த விஜயா கடே, கடந்த ஆண்டு அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கணக்கை சில நாட்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
பிரதமர் மோடி உண்மையான தேச பக்தர்: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் புகழாரம்
சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ட்விட்டர் நிறுவனத்துக்கு நேற்று முன்தினம்எலான் மஸ்க் வந்திருந்தார். அங்கு பொறியாளர்களுடன், விளம்பர அதிகாரிகளுடன் எலான் மஸ்க் ஆலோசனை நடத்தினார். ட்விட்டர் நிறுவனத்தின் கன்டென்ட் வடிவத்தை மாற்றுவது, அல்காரிதம் முறையை வெளிப்படையாக்குவது, வர்த்தகத்தை எளிமைப்படுத்துவது போன்றவற்றை செய்ய இருப்பதாகவும், ஊழியர்களைக் குறைக்கவும் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.