Vladimir Putin: பிரதமர் மோடி உண்மையான தேச பக்தர்: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் புகழாரம்

By Pothy RajFirst Published Oct 28, 2022, 9:22 AM IST
Highlights

பிரதமர் மோடி உண்மையான தேச பக்தர். தங்கள் நாட்டுக்காக சுயமாக வெளியுறவுக் கொள்கையை உருவாக்கி, மேக் இன் திட்டத்தை செயல்படுத்தி வருபவர் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் மோடி உண்மையான தேச பக்தர். தங்கள் நாட்டுக்காக சுயமாக வெளியுறவுக் கொள்கையை உருவாக்கி, மேக் இன் திட்டத்தை செயல்படுத்தி வருபவர் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியா-ரஷ்யா இடையிலான உறவு குறித்த வலாடி கலந்தாய்வுக் கூட்டம் மாஸ்கோவில் நேற்று நடந்தது. இதில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பங்கேற்றார். அப்போது அவர் இந்தியா, ரஷ்யா உறவு குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் பெருமிதம் அடைந்தார். அவர் பேசியதாவது:

இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து ரூ.126 கோடி ஈவுத்தொகை ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்தி

உலகிலேயே தனது தேசத்தின் நலனுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் சுயமான வெளியுறவுக் கொள்கையை வகுத்துச் செயல்பட முடியும் என இருக்கும் தலைவர்களில் பிரமதர் மோடியும் குறிப்பிடத்தகுந்தவர். பிரதமர் மோடி இந்தியாவின் உண்மையான, மிகப்பெரிய தேச பக்தர்.
நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்லும் அவரின் எந்த முயற்சியையும் ஏதும் தடுத்துவிட முடியாது, தொடர்ந்து இலக்குகளை நோக்கி அவர் நடைபோடுகிறார். எந்த செயலையும் எளிதாகக்கூடிய திறமை படைத்தவர் மோடி.

இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது, உலக அரசியலில் அந்த நாட்டின் பங்கு அதிகரித்து வருகிறது என்று நான் நினைக்கிறேன். பல பத்தாண்டுகளாக இந்தியா, ரஷ்யா இடையிலான உறவுகள் வலுவாக இருந்து வருகின்றன. 

உக்ரைனில் இருந்து இந்திய மக்கள் வெளியேறுங்கள்... இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!!

இந்தியாவுடன் இதுவரை எந்தவிதமான பிரச்சினையும் இருந்தது இல்லை. இருவரும் காலம்காலமாக ஒருவருக்கொருவர் ஆதரவு அளித்துவரும் நாடாக இருந்து வருகிறோம். அதுதான் இப்போதும் நடந்து வருகிறது, இது எதிர்காலத்திலும் தொடரும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்

இந்திய வேளாண்மைக்கு அத்தியாவசியமான உரம் ஏற்றுமதியை அதிகப்படுத்த என்னிடம் பிரதமர் மோடி கேட்டிருந்தார். அவர் கேட்டுக்கொண்டபின், உரம் ஏற்றுமதியை 7.6 மடங்கு அதிகரித்துள்ளோம். பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு இந்தியா மிகப்பெரிய வளர்ச்சிப்பாதையில் செல்கிறது. உலகில் அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் இந்தியா செயல்பட்டு வருகிறது.

இந்தியா, அமெரிக்காவுக்கு எதிராக சைபர் ராணுவம்! பாகிஸ்தானுக்கு துருக்கி ரகசிய உதவி

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் கடந்த சிலஆண்டுகளாக இந்தியா ஏராளமான விஷயங்களைச் செய்து வருகிறது. இந்தியாவில் அனைத்தையும் உற்பத்தி செய்ய முடியும், தயாரிக்க முடியும் என்ற பிரதமர் மோடியின் சித்தாந்தம் முக்கியத்துவம் வாய்ந்தது.

உக்ரைனுடன் நாங்கள் முரண்பட்டிருப்பதால் அது குறித்து இந்தியாவின் கவலையும், நிலைப்பாடையும் நாங்கள் அறிவோம். இவை அனைத்தும் விரைவாக முடிவுக்கு வந்துவிடும். அங்கு என்ன நடக்கிறது என்பதை இந்தியாவுக்கு முறைப்படி தெரியப்படுத்துவோம். 

இவ்வாறு புதின் தெரிவித்தார்
 

click me!