Pakistan Cyber Army: இந்தியா, அமெரிக்காவுக்கு எதிராக சைபர் ராணுவம்! பாகிஸ்தானுக்கு துருக்கி ரகசிய உதவி

By Pothy Raj  |  First Published Oct 27, 2022, 12:08 PM IST

தெற்காசியாவில் முஸ்லிம்களின் ஆதிக்கத்தை ஒருங்கிணைக்கவும், பொதுக்கருத்தை உருவாக்கவும், பாகிஸ்தான் ஆட்சியாளர்களை குறைத்து விமர்சிக்கும், இந்தியா, அமெரிக்காவுக்கு எதிராக சைபர் ராணுவத்தை பாகிஸ்தான் உருவாக்க துருக்கி நாடு ரகசியமாக உதவி வருகிறது.


தெற்காசியாவில் முஸ்லிம்களின் ஆதிக்கத்தை ஒருங்கிணைக்கவும், பொதுக்கருத்தை உருவாக்கவும், பாகிஸ்தான் ஆட்சியாளர்களை குறைத்து விமர்சிக்கும், இந்தியா, அமெரிக்காவுக்கு எதிராக சைபர் ராணுவத்தை பாகிஸ்தான் உருவாக்க துருக்கி நாடு ரகசியமாக உதவி வருகிறது.

இந்த செய்தியை நோர்டிக் மானிட்டர் எனும் இணையதளம் வெளியிட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

கடந்த 2018, டிசம்பர் 17ம் தேதி, துருக்கி உள்துறை அமைச்சர் சுலைமான் சுலையு, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷெஹாரியார் கான் அப்ரிதி இடையே பேச்சு நடந்த போது, சைபர் ராணுவம் அமைக்கும் திட்டம் பற்றி பேச்சு நடத்தப்பட்டு திட்டமுன்வடிவு வைக்கப்பட்து. இந்த திட்டம் மூத்த அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு, மிகுந்த ரகசியமாக வைக்கப்பட்டது.

இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது இந்த சைபர் ராணுவம் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அப்போது இம்ரான்கான், அந்நாட்டின் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தார்.
2022, அக்டோபர் 13ம் தேதி துருக்கி உள்துறை அமைச்சர் சுலையு அந்நாட்டின் ஒரு சேனலுக்கு பேட்டிஅளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:

 “சைபர் ராணுவத்தை பாகிஸ்தான் அமைக்க உதவி வருகிறோம். (எந்த நாடுகளுக்கு எதிராக உருவாக்கப்படுகிறது என்பதை தெரிவிக்கவில்லை)

பிரிட்டனைக் காப்பாற்றுவாரா? ரிஷி சுனக்கிற்கு காத்திருக்கும் 9 சவால்கள் என்ன?

பாகிஸ்தானுக்கு சமீபத்தில் நான் சென்றிருந்தேன்.  அப்போது என்னை அந்நாட்டு அமைச்சர் அப்ரிதி சந்தித்து, தனிமையில் பேசிகையில்,  சைபர் ராணுவ அமைப்பு முறை உருவாக்குவதற்கு உதவி கோரினார்

அப்போது அப்ரிதி  என்னிடம் “ பாகிஸ்தான் குறித்து எதிர்மறையான கருத்தை சமூக வலைத்தளம் மூலம் உருவாக்க அமெரிக்கா முயன்று வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்க, சைபர் ராணுவத்தை உருவாக்க உதவி செய்யுமாறு துருக்கி நாட்டிடம் கேட்டுக்கொண்டார்.

இதை வெளிப்படையாகக் கேட்க இரு நாட்டு அமைச்சர்கள் சந்திப்பின்போது கேட்க அப்ரிதி கூச்சப்பட்டார். தனிமையில் என்னை சந்தித்துப்பேசியபோது இந்த கோரிக்கையை வைத்தார்

பாகிஸ்தான் முன்வைத்த கோரிக்கைக்கு துருக்கி அரசும் சாதகமான பதில் அளித்தது. இதற்காக துருக்கியில் இருந்து காவல்துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் 5 தலைவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தோம்.

ரிஷி சுனக் அமைச்சரவை: பிரதமரின் உயர்மட்ட அணியில் யார்?

 பாகிஸ்தானில் பலமாதங்களாக இந்த குழுக்கள் பணியாற்றி, அங்குள்ள களநிலவரத்தை ஆய்வு செய்து, இறுதியாக அந்தத் திட்டத்தை முடித்தது. இரு நாடுகளுக்கு இடையே சைபர் ராணுவம் குறித்த ஒத்துழைப்பு இன்னும் தொடர்ந்து வருகிறது.

 பாகிஸ்தானைச் சேர்ந்த 6 ஆயிரம் போலீஸ் அதிகாரிகளுக்கு இந்த திட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு திட்டங்களுக்காக துருக்கி ராணுவம் பயிற்சி அளித்துள்ளது” இவ்வாறு சுலையு தெரிவித்தார்

உக்ரைனில் இருந்து இந்திய மக்கள் வெளியேறுங்கள்... இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!!

பாகிஸ்தான் சைபர் ராணுவம் உருவாக்க துருக்கி உதவியுள்ளது. இந்த சைபர் ராணுவம் என்பது, இந்தியா மற்றும் அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு சக்திகளுக்கு எதிராகச் செயல்பட உருவாக்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

click me!