இலங்கை பிரச்சனையில் மூக்கை நுழைக்கும் அமெரிக்கா! - சீனாவின் நிலைப்பாடு என்ன?

Published : Jul 14, 2022, 11:22 AM ISTUpdated : Jul 14, 2022, 12:27 PM IST
இலங்கை பிரச்சனையில் மூக்கை நுழைக்கும் அமெரிக்கா! - சீனாவின் நிலைப்பாடு என்ன?

சுருக்கம்

இலங்கையில் மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு ஓடியுள்ளார். இந்நிலையில், இலங்கைக்கான அமெரிக்க தூதர் சுங், அரசியல் நெருக்கடியை அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றத்தை உறுதிபடுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்  

இலங்கையில் கடந்த 10 ஆண்டுகளி்ல் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எரிபொருள், உணவு, ஏற்றுமதி, இறக்குமதி பொருட்கள் என அனைத்திற்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் கடும் கோபமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் தனி வீட்டையும் கைப்பற்றியுள்ளனர். தினம் தினம் ஏராளமான பொதுமக்கள்  அதிபர் மாளிகையை சுற்றிப்பார்க்க வருவதோடு, மேலும் பலர் அங்கேயே தங்கி தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த புதன் கிழமை ராஜினாமா செய்வதாகக்கூறிய அதிபர் கோத்தபய ராஜபக்சே, ராணுவ ஜெட் விமானம் மூலம் மாலத்தீவுக்கு தப்பிச்சென்றுவிட்டார். இதுவரை அவர் ராஜினாமா செய்யாததால் மக்கள் இலங்கையில் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இடைக்கால அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கே நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்தார். 

இதைத்தொடர்ந்து, இலங்கை நாட்டின் பங்கு சந்தை மூடப்பட்டுள்ளது. அனைத்து செயல்பாடுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டு தூதரகங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், இலங்கையில் அமைதியுடன் அதிகார பரிமாற்றத்தை உறுதிசெய்யுமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் டூவீட் செய்துள்ளார். 

 

 

மேலும் அதில் அவல் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டின் முன்னேற்றத்திற்கான திறவுகோலாக இந்த தருணத்தை அணுகுமாரு அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொண்டுள்ளார். நீண்ட கால பொருளாதார மற்றும் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வரும் முடிவுகளை விரைந்து செயல்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். 

கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்வதில் சிக்கல்

நாட்டில் நிகழும் வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சுங், நிலையான ஆட்சியை நிலைநிறுத்த அழைப்பு விடுப்பதாகவும், இலங்கையின் ஜனநாயக  மற்றும் அரசியலமைப்பு  கட்டமைப்பிற்குள் அமைதியான அதிகார பரிமாற்றம் அவசியமானது என்றும் தெரிவித்தார். இதன் மூலம் மட்டுமே வெளிப்படைத்தன்மை, ஜனநாயக ஆட்சி மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான மக்களின் கோரிக்கையை பூர்த்தி செய்ய முடியும் என தெரிவித்துள்ளார். 

இலங்கையில் அமைதியை நிலைநாட்ட தமிழ் தலைவர்களிடம் கலந்துரையாட வேண்டும்: ஜனத் ஜெயசூர்யா
 

PREV
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு